லியோ பட நடிகரை பங்கமாக கலாய்த்த மதுரை முத்து.. இருந்தாலும் அந்த மனுஷன் ரொம்ப பாவம்ப்பா!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கவுதம் மேனனை காமெடி நடிகர் மதுரை முத்து மீம் போட்டு கலாய்த்து ரகளை செய்துள்ளார்.
தொடர்ந்து ஏகப்பட்ட மீம்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார் மதுரை முத்து.
நெட்டிசன்கள் பலரும் இயக்குநர் கவுதம் மேனன் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதை ட்ரோல் செய்து வரும் நிலையில், இவரும் தன் பங்குக்கு பங்கமாக கலாய்த்துள்ளார்.

முழுசா நடிகரா மாறிய கவுதம் மேனன்
தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் மற்றும் ரொமான்டிக் இயக்குநராக வலம் வரும் கவுதம் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான சில படங்கள் சரியாக போகவில்லை. மேலும், தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து கடன் தொல்லையில் சிக்கிக் கொண்டார் கவுதம் மேனன் எனக் கூறப்பட்டது. அப்போது, ஒரு சில படங்களில் தலையை காட்ட ஆரம்பித்த கவுதம் மேனன் தொடர்ந்து பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

பத்து தல வருது
வார வாரம் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ கவுதம் மேனன் இருக்கும் படங்கள் வெளியாகிறது என்றே ஏகப்பட்ட மீம்கள் சுற்றி வருகின்றன. இந்நிலையில், இந்த வாரம் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தில் அரசியல்வாதியாக மிரட்ட காத்திருக்கிறார் கவுதம் மேனன்.

விடுதலை
ஒரு பக்கம் சிம்புவின் பத்து தல படத்தில் கவுதம் மேனன் வில்லனாக நடித்துள்ள நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் கவுதம் மேனன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இந்த வாரம் கவுதம் மேனன் vs கவுதம் மேனன் போட்டி நிலவுவதால் தான் தற்போது ஏகப்பட்ட மீம்கள் குவிந்து வருகின்றன.

லியோ படத்திலும்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் லியோ படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் உள்ளதாக கூறுகின்றனர். அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்களுடன் சேர்ந்து இயக்குநர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கவுதம் மேனன் குறித்த மீம் ஒன்றை மதுரை முத்து பதிவிட்டு சமூக வலைதள ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

கலாய்த்த மதுரை முத்து
ஏழாம் அறிவு படத்தில் சூர்யா ஸ்ருதிஹாசன் எடுக்கும் அனைத்து செல்ஃபிக்களிலும் இருப்பது போல கவுதம் மேனனும் புதிதாக வெளியாகும் அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார் என ரசிகர்கள் மீம் போட்டு வந்த நிலையில், சின்னத்திரை காமெடி நடிகர் மதுரை முத்துவும் தன் பங்குக்கு ஒரு மீம் போட்டு கவுதம் மேனனை கலாய்த்திருக்கிறார்.

அது பாம்பு எடுக்குற படம்ங்க
அது என்ன படம்.. ஏன் என்ன கூப்பிடல என கவுதம் மேனன் முறைத்து நிற்க.. மதுரை முத்து.. ஏங்க.. படம் எடுக்குறது பாம்புங்க என மீம் போட்டு இணையத்தில் ரகளை செய்துள்ளார். தொடர்ந்து பல்வேறு விஷயங்களுக்கு மீம் போட்டு டிரெண்டாகி வருகிறார் மதுரை முத்து. அதே போல கவுதம் மேனன் எந்த ட்ரோல் பற்றியும் கவலைப்படாமல் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி நிறைய படங்களில் நச்சென நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











