twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிடா வெட்டு கிடையாது.. ஆனா விருந்து உண்டு! - மதுரை ரஜினி ரசிகர் மன்றம்

    By Shankar
    |

    மதுரை: மதுரையில் நாளை மறுதினம் 100 ஆடுகளை வெட்டி கிடா விருந்து நடத்தப் போவதாக அறிவித்திருந்த ரஜினி ரசிகர்கள், அதில் ஒரு மாற்றம் செய்துள்ளனர். ஆடுகளை வெட்டுவதை நிறுத்திவிடுவதாகவும், ஆனால் கறி விருந்து மட்டும் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததை வரவேற்றுக் கொண்டாடும் வகையில் மதுரையில் 100 ஆடுகளை வெட்டி கறி விருந்து தர மதுரை ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர்.

    Madurai Rajini fans drop 100 goat killing plan

    இந்த தகவல் வெளியானதும், பீட்டா அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பொது இடத்தில் 100 ஆடுகளை வெட்டுவது சட்ட விரோதம்... எனவே தடுத்து நிறுத்துமாறு ரஜினிக்கு கடிதம் எழுதினர்.

    ரஜினி இப்போது மலேசியாவில் உள்ளார். இந்தக் கடிதத்துக்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை ரஜினிகாந்த்.

    ஆனால் மதுரை ரசிகர்கள் இப்போது புதிய முடிவை எடுத்துள்ளனர். திட்டமிட்டபடி ஜனவரி 7-ம் தேதி கறி விருந்து நடத்துவதென்றும், ஆனால் 100 ஆடுகளை வெட்டும் திட்டத்தைக் கைவிடுவதாகவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    After PETA's objection, the Madurai Rajinikanth fans have dropped thier idea of killing 100 goats for a feast that is arranged to celebrate Rajinikanth's political entry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X