பிரபல தியேட்டரில் துணிவு ஷோ கேன்சலா... வாரிசு மட்டும் எப்படி?: ப்ளு சட்டை மாறன் கேள்வி
சென்னை: விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - அஜித் திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனிடையே ஏற்கனவே துணிவு ட்ரெய்லர் வெளியாகிவிட்ட நிலையில், தற்போது வாரிசு ட்ரெய்லரும் ரிலீஸாகவுள்ளது.
இந்த பரபரப்புக்கு நடுவில் அஜித்தின் துணிவு பிரபல திரையரங்கில் திரையிடப்படாது என்ற அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ட்ரெண்டிங்கில் வாரிசு ட்ரெய்லர்
விஜய் - அஜித் இருவரும் பொங்கல் ரேஸில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேருக்கு நேர் மோதவுள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு படத்தில் விஜய் ஹீரோவாகவும், ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தில் அஜித் ஹீரோவாகவும் நடித்துள்ளனர். இதில் ஏற்கனவே அஜித்தின் துணிவு ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. இதனையடுத்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் வாரிசு ட்ரெய்லர், இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸாகிறது. இதனால் வாரிசு ட்ரெய்லர் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

சாதனை படைக்குமா ட்ரெய்லர்
டிசம்பர் 31ம் தேதி ரிலீஸான துணிவு ட்ரெய்லர் நான்கே நாட்களில் 46 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதேபோல் விஜய்யின் வாரிசு ட்ரெய்லரும் சாதனை படைக்குமா என எதிர்பார்ப்பு காணப்படுகிறது. துணிவு ட்ரெலர் முழுக்க முழுக்க ஆக்சன் ட்ரீட்டாக ரசிகர்களை மிரட்டியிருந்தது. ஆனால் வாரிசு ட்ரெய்லர் ஆக்சன் பிளஸ் செண்டிமெண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாரிசு திரைப்படம் ஃபேமிலி என்டர்டெயின்மெண்டாக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

துணிவு படம் கேன்சல்
இந்நிலையில், வாரிசு, துணிவு திரைப்படங்களில் எதற்கு அதிகமான தியேட்டர்கள் கிடைக்கும் என்ற பஞ்சாயத்து ஆரம்பம் முதலே நடக்கிறது. ஆனால், இரண்டு படங்களுக்குமே சமமான திரைகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியானது. இதனிடையே மதுரை சோழவந்தானில் பிரபல எம்விஎம் தியேட்டரில் துணிவு திரைப்படம் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளு சட்டை மாறன், கேள்வி குறியையும் வைத்துள்ளார். அங்கு விஜய்யின் வாரிசு திரையிடப்படுவதால் தான், அஜித்தின் துணிவு கேன்சல் என்றும் சொல்லப்படுகிறது.

இதுதான் காரணமா?
அஜித்தின் துணிவு கேன்சல் செய்யப்பட்டு அங்கு விஜய்யின் வாரிசு ரிலீஸ் செய்யப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின இதனால் இருதரப்பு ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் சண்டை செய்து வருகின்றனர். இதனிடையே சோழவந்தானில் மொத்தமே இரண்டு திரையரங்குகள் தான் உள்ளது என்றும், ஒன்றில் விஜய்யின் வாரிசும் இன்னொன்றில் அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி எம்விஎம் தியேட்டரில் விஜய்யின் வாரிசு படமும், வி சினிமாஸில் அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸாகிறதாம். இதனால் தற்போது விஜய் - அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அடங்கிப் போயிருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











