சர்கார் பட டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து

By Siva

Recommended Video

சர்காருக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் திரையரங்கு உரிமம் ரத்து- வீடியோ

மதுரை: மதுரையில் சர்கார் படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த தியேட்டர்களின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர் உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது,

சர்கார்

சர்கார்

நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக விஜய் நடித்த சர்கார் திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படம் மதுரையில் 5க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகிறது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் ஒரு டிக்கெட் ரூபாய் 500 முதல் 1000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1000 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிப்பது விதிமீறல்.

டிக்கெட்

டிக்கெட்

16.10 2017 ஆம் ஆண்டு உள்துறை ( சினிமா ) வெளியிடப்பட்ட அரசாணையில் கட்டணங்கள் குறித்து வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கபட வேண்டும் எனவும், மற்ற திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், ஏசி திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என்றும் அரசாணையில் உள்ளது. ஆனால் அரசாணையை பின்பற்றாமல் பலமடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மதுரை

மதுரை

மதுரையில் உள்ள தனியார் அமைப்புகள் மூலம் சர்கார் படத்தின் ஒரு டிக்கெட் ரூபாய் 1000 வரை விற்கப்படுகிறது. இந்த சினிமா டிக்கெட் கட்டணம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருகிறது. இதுபோன்ற கூடுதல் கட்டணம் வசூல் செய்வதால் ஜிஎஸ்டி வருவாய் குறைய வாய்ப்புள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் 2017 ல் உள்துறை செயலர் ( சினிமா ) வெளியிடபட்ட அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க உரிய உத்தரவிட வேண்டும் என்று மகேந்திர பாண்டி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

விசாரணை

விசாரணை

மகேந்திர பாண்டி தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சர்கார் படத்தை வெளியிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பு

தீர்ப்பு

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X