'நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல..' - விஜயகாந்த் மகன் படத்தில் சமூக அவலங்களைச் சாடும் பாடல்!

By Vignesh Selvaraj

சென்னை : விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தற்போது, ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கும் 'மதுரவீரன்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் 'என்ன நடக்குது நாட்டுல...' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

சண்முகபாண்டியன் நடித்த முதல் படமான 'சகாப்தம்' தோல்வியடைந்ததை அடுத்து இந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர். இந்நிலையில், 'மதுரவீரன்' படத்தின் ஒரு பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.

Maduraveeran single track released

'என்ன நடக்குது நாட்டுல,

அதை எடுத்துச் சொல்லணும் பாட்டுல..

கொள்ளை அடிச்சவன் கூட்டுல,

நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல..

எதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம,

அடங்கி ஒடுங்கி கிடப்பதால ஆளுக்காளு நாட்டாம..'

என நீள்கிறது பாடல் யுகபாரதியின் வரிகளில்.

சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சாடும் வகையில் இந்தப் பாடல் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெயமூர்த்தி என்பவர் இப்பாடலைப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X