கேப்டன் களமிறங்கிட்டாருடோய்... 'என்ன நடக்குது நாட்டுல' பாடல் ஆர்.கே.நகரில் ஒலிபரப்பு!
Recommended Video

சென்னை : விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தற்போது, ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கும் 'மதுரவீரன்' படத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் 'என்ன நடக்குது நாட்டுல...' என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.
இந்தப் பாடல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒலிபரப்பப்படும் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகாப்தம்
சண்முகபாண்டியன் நடித்த முதல் படமான 'சகாப்தம்' தோல்வியடைந்ததை அடுத்து இந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர். இந்நிலையில், 'மதுரவீரன்' படத்தின் ஒரு பாடல் ரிலீஸ் ஆனது.

சமூக அவலத்தைத் தோலுரிக்கும் பாடல்
யுகபாரதியின் வரிகளில் உருவாகியிருக்கிறது இந்தப் பாடல். பாடலின் சில வரிகள் கீழே...
"என்ன நடக்குது நாட்டுல,
அதை எடுத்துச் சொல்லணும் பாட்டுல..
கொள்ளை அடிச்சவன் கூட்டுல,
நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல..
எதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம,
அடங்கி ஒடுங்கி கிடப்பதால ஆளுக்காளு நாட்டாம..."

பாடகர் ஜெயமூர்த்தி
சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சாடும் வகையில் இந்தப் பாடல் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெயமூர்த்தி என்பவர் இப்பாடலைப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஆர்.கே.நகரில் ஒலிபரப்பாகும்
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவிருக்கும் 'மதுரவீரன்' படத்தின் 'என்ன நடக்குது நாட்டுல' பாடல் சமூகத்தின் அவலநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் இப்பாடல் ஒலிபரப்பப்படும் என விஜயகாந்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு
இந்தப் பாடல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநாட்டுக் கூட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது. இந்தப் பாடலுக்கு குழந்தைகள் நடனமாடிய வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











