தலைமுறைகள் பட தேசிய விருதினை இளையராஜாவிடம் கொடுத்து ஆசிபெற்ற சசிகுமார்!
சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட பாலு மகேந்திராவின் தலைமுறைகள் படத்துக்கு கிடைத்த தேசிய விருதினை இளையராஜாவிடம் வழங்கி ஆசி பெற்றார் இயக்குநரும் தயாரிப்பாளருமான சசிகுமார்.
இளையராஜா இசையில், அமரர் பாலு மகேந்திரா இயக்கி, நடித்த படம் தலைமுறைகள்.

தமிழ் மொழியை வளரும் தலைமுறை மறந்துவிடக் கூடாது, தமிழில் பேச வேண்டும் என்ற செய்தியைத் தாங்கி வந்த இந்தப் படத்தில், பாலு மகேந்திரா அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.
இந்தப் படம் வெளியான சில மாதங்களில் பாலு மகேந்திரா மரணத்தைத் தழுவினார்.
இந்தப் படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருதினை மத்திய அரசு அறிவித்தது. சமீபத்தில் டெல்லி சென்று குடியரசுத் தலைவர் கையால் இந்த விருதினைப் பெற்று வந்தார் படத்தின் தயாரிப்பாளரான எம் சசிகுமார். இந்தப் படத்தில் சிறு வேடம் ஒன்றிலும் அவர் நடித்திருந்தார்.
விருது பெற்ற கையோடு பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் சென்ற சசிகுமார், அதனை இளையராஜாவிடம் வழங்கி ஆசி பெற்றார்.
அப்போது மறைந்த பாலு மகேந்திரா குறித்தும், இந்தப் பட உருவாக்கம் குறித்தும் பல விஷயங்களை சசிகுமாருடன் பகிர்ந்து கொண்டார் இளையராஜா.


Click it and Unblock the Notifications











