மாஃபியா என் இதயத்துக்கு நெருக்கமான படம்... சொல்வது பிரியா பவானி சங்கர்
சென்னை: மாஃபியா படம் பல காரணங்களுக்காக என் இதயத்துக்கு மிக நெருக்கமான படமாக இருக்கும் என்றதோடு இது மிகவும் சீரியஸான படம் தான் என்று பிரியா பவானி சங்கர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "துருவங்கள் பதினாறு" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கார்த்திக் நரேன் அறிமுகம் ஆனார். துருவங்கள் பதினாறு திரைப்படம் மக்கள் இடையே நல்ல வரவேற்பபை பெற்றது.
அதன் பிறகு அவர் இயக்கிய நரகாசூரன் திரைப்படத்தை கௌதம் மேனன் தயாரித்தார். அவர்களுக்குள் இடையே சிறிய தகராறு ஏற்பட்டதை அடுத்து நரகாசூரன் திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் அமைந்தது.

நரகாசூரன்
அதன் பிறகு அவர்கள் பிரச்சனை எல்லாம் சரியானதும், நரகாசூரன் திரைப்படம் வெளிவரும் தேதி தள்ளிபோகுது. அதன் பிறகு நாடக மேடை என்ற திரைப்படம் ஆரம்பித்தனர். அனால் அது எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.

மாஃபியா
தற்போது கார்த்திக் நரேன், லைகா நிறுவனம் தயாரிக்கும் மாஃபியா திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய், நடிகர் பிரசன்னா, நடிகை பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

பிரியா பவானி சங்கர்
மாஃபியா ஒரே ஷெட்யூலில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்கள். இதில் கதாநாயகி பிரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பை வேகமாக முடித்ததற்கு இயக்குநர் கார்த்திக் நரேனை, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெகுவாக பாராட்டியுள்ளார் பிரியா பவானிசங்கர்.

மாஃபியா மகிழ்ச்சி
இது குறித்து தன்னுடைய பதிவில், மாஃபியா படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மகிழ்ச்சியாக மிக உற்சாகமாக மிக வேகமாக நடந்த படிப்பிடிப்பு. கார்த்திக் நரேனின் 3 பவுண்ட் எடை கொண்ட விசேஷ மூளையின் திறன் பற்றி நாங்கள் இன்னும் ஆச்சரியப்பட்டு கொண்டிருக்கிறோம்.

அருண் விஜய் ஆச்சரியம்
அருண் விஜய், நீங்கள் கனிவு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, திறமை, நேர்மறை எண்ணம் என அனைத்தையும் கொண்ட ஒரு ஆச்சரியமான மனிதர். நீங்கள் எனக்கு எதிர்பாராமல் கிடைத்த அருமையான நண்பர். ஒரு மாதம் விடாமல் படப்பிடிப்பு நடந்தது போலவே எங்களுக்கு தெரியவில்லை.

இதயத்திற்கு நெருக்கமான படம்
இந்தப் படப்பிடிப்பு குழுவில் இருந்த அனைவரும் இந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாததாக விசேஷமானதாக மாற்றினீர்கள். இப்படி பல காரணங்களுக்காகவே மாஃபியா என் இதயத்துக்கு மிக நெருக்கமான படமாக இருக்கு. உங்கள் அனைவருக்கும் என் அன்பு, (பின்குறிப்பு) இவ்வளவு மகிழ்ச்சி இருந்தாலும் கூட இது சீரியஸான படம் தான் என்றும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

காப்பானுடன் டீசர் ரிலீஸ்
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீஸர் தயாராகியுள்ளதாகவும், நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்துடன் திரையரங்குகளில் மாஃபியா டீஸர் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











