ஜெயிக்கப்போறது சிங்கத்தோட பலமா நரியோட தந்திரமா - வைரலாகும் மாஃபியா டீசர்

சென்னை: நடிகர் அருண் விஜய் நடித்த மாஃபியா திரைப்படத்தின் டீசரை பார்த்த ரஜினிகாந்த் பாராட்டியிருந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் அதிகாரபூர்வமாக டீசரை வெளியிட்டார். இதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அருண் விஜய் நடித்த தடம் திரைப்படம் வெற்றி பெற்றாலும், அதற்கு அடுத்த வெளிவந்த பிரமாண்டா தயாரிப்பான சாஹோ படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாததால் வசூலும் எதிர்பார்த்த அளவில் இல்லை.

Mafia Official Trailer Released by A.R.Murugadass

நடிகர் அருண் விஜய் தடம், சாஹோ திரைப்படங்களை தொடர்ந்து தற்போது மாஃபியா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன், நாடக மேடை ஆகிய திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இதனால் அடுத்ததாக நடித்துவரும் மாஃபியா படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.

குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்யுடன், நடிகர் பிரசன்னா, நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் முதல் பகுதி கதை மட்டும் தான் வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது, ஏனென்றால் திரைப்படத்தின் தலைப்பின் கீழ் சேப்டர் 1 என்ற எழுதப்பட்டுள்ளது. இதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பகுதி கதையும் நிச்சயம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன் கீழ் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜாக்ஸ் பேஜோய் இசையில், கோகுல் பெனோய்யின் ஒளிப்பதிவில் எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பில் மாஃபியா திரைப்படம் தயாராகி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை நடிகர் ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். டீசரை பார்த்த ரஜினி, நல்ல பனி, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருந்தார்.

தற்போது இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இதில் நடிகர் அருண் விஜய்யின், ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா என்ற வசனமும் நடிகர் பிரச்சன்னா பேசும் நரியோட தந்திரமா என்ற வசனமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X