விரைவில் மாஃபியா 2.. டெக்ஸ்டர் ரெடி.. அருண் விஜய் ட்விட்.. ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை : மாஃபியா 2 பாகம் விரைவில் வெளியாகும் என்று அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Recommended Video

Vetrimaran Soori Combo Delay? | Velvet Nagaram | Mahesh Babu Vs Allu Arjun

தனது வித்தியாசமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் தான் அருண் விஜய், அப்பா ஒரு நடிகர் அவரது மகன் என்று இல்லாமல் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

Mafia part 2 coming soon

முதல் படமே இயக்குனர் சுந்தர்.சி உடன் இணைந்தார் அருண் விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமைந்தது இயற்கை திரைப்படம் இன்று வரை எவராலும் மறக்க முடியாத படம் அது பலரது நினைவில் நிலைத்து நிற்கும் படம்.

Mafia part 2 coming soon

வரிசையாக படங்களில் நடித்து வந்த அருண் விஜய்க்கு கடைசி ஹிட் ஆக தடையற தாக்க திரைப்படம் அமைந்தது, அதன் பின் சுமார் மூன்று
வருடங்களாக படம் இல்லாமல் இருந்தார். அஜித் உடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தார் அன்று துவங்கிய அவரது கிராப் இன்று வரை உச்சத்தில் தான் உள்ளது.

Mafia part 2 coming soon

வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்தார் அருண் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இவர் நடிப்பில் "மாஃபியா" திரைப்படம் வெளியானது, இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது, ஆனால் கிளைமாக்ஸ் காட்சி தான் படத்தையே தாங்கி பிடித்தது. படம் இன்னொரு பாகம் உருவாவதை போல படம் முடிக்கபட்டு இருக்கும்.

Mafia part 2 coming soon

தற்போது அந்த படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று படத்தின் நாயகன் அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த செய்தி அருண் விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் ஹரி தாஸ் இயக்குனருடன் நடித்து வரும் சினம் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அப்படமும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X