மாஃபியா டீஸர் - 2 மிரட்டல்.. அருண் விஜய்யுடன் ஆக்ஷனில் கலக்கும் பிரியா பவானி சங்கர்!
Recommended Video
சென்னை: துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஃபியா.
லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றன.
டிசம்பர் 7ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற தர்பார் இசை வெளியீட்டு விழாவில் மாஃபியா படத்தின் இரண்டாம் டீஸர் திரையிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த டீஸர் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் டீஸரில் அருண் விஜய் மற்றும் பிரசன்னாவின் அசத்தல் நடிப்பை கண்டு ரசித்த ரசிகர்கள், இரண்டாவது டீஸரில் பிரியா பவானி சங்கரில் ஆக்ஷன் அவதாரத்தை பாராட்டி வருகின்றனர்.

மாஃபியா
தமிழில் நார்காடிக்ஸ் போதைப் பொருள் குறித்த படங்கள் குறைந்த அளவிலேயே வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான கைதி படத்திலும் போதை பொருள் கடத்தல் கும்பலை மையமாக வைத்துத் தான் படம் நகர்ந்தது. ஆனால், கார்த்திக் நரேனின் மாஃபியா படம் ஹாலிவுட் ரேஞ்சில் மாஃபியா கும்பல் நார்காடிக்ஸ் டான் என ஹை லெவலில் இருக்கும் என்பது டீஸர்களை பார்க்கும் போதே தெரிகிறது.

அருண் விஜய்
என்னை அறிந்தால் படத்தின் மூலம் கம்பேக்கான அருண்விஜய்க்கு தொடர்ந்து பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சில படங்களில் வில்லனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் அசத்தி வந்தாலும், தன்னுடைய படங்களுக்கான கதைகளையும் இயக்குநர்களையும் அவர் தேர்வு செய்து வரும் முறை தான் அடுத்தடுத்து ஹிட் படங்களை அவரால் கொடுக்க முடிகிறது. மாஃபியா படம் நிச்சயம் அந்த ஹிட் வரிசையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டீஸர்
சிங்கம் மற்றும் நரி கதையை வைத்து மைண்ட் கேமாக வெளியான முதல் டீஸர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. வில்லனாக பிரசன்னாவும் ஹீரோ ஆர்யனாக அருண் விஜய்யும் தங்களின் தனித்துவமான நடிப்பினை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.
டீஸர் 2
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட மாஃபியா டீஸர் 2, அனைத்து ரசிகர்களின் பார்வைக்காக யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. நார்காடிக்ஸ்ன்னா மோப்பம் புடிக்கிற சக்தி அதிகமா இருக்கும், நீயும் அதுல இருந்து தப்ப முடியாது என அருண் விஜய்யின் குரலில் அதிரடியாக ஓப்பனாகும் டீஸர், அதனை தொடர்ந்து பிரசன்னா பேசும் ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்.. பாடுற மாட்டை பாடி கறக்கணும்னு பழமொழி பஞ்ச் என பட்டையை கிளப்புகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே முதல் டீஸரில் ஸ்கோர் செய்துள்ள நிலையில், இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர் துப்பாக்கியும் கையுமாக ஆக்ஷன் அவதார் எடுத்துள்ளார்.

எப்போ ரிலீஸ்
லைகா நிறுவனம் தயாரிப்பில் பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் வெளியாகவுள்ள நிலையில், தர்பார் படத்தை தொடர்ந்து அருண் விஜய்யின் மாஃபியா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது டீஸர் இறுதியில் Early 2020 என குறிப்பிடப்பட்டுள்ளதால், வெகு சீக்கிரமாகவே மாஃபியா திரைக்கு வரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











