மாஸா இருக்கா.. கிளாஸா இருக்கா.. மாஃபியா ட்விட்டர் விமர்சனம்!
Recommended Video
சென்னை: துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில், அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள மாஃபியா திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த திரைப்படம், இன்று காலை 8 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த ரசிகர்கள், பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தையே வைத்து வருகின்றனர்.
மாஃபியா படம் மாஸா இருக்கா, கிளாஸா இருக்கா, ட்விட்டர் வாசிகள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்..
மாஸ் + கிளாஸ்
மாஃபியா படம் மாஸாகவும் கிளாஸாகவும் இருக்கிறது என்று, இந்த ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். மேலும், அருண் விஜய்க்கு இந்த படம் பிளாக்பஸ்டர் என்றும், பிரியா பவானி சங்கர் துப்பாக்கியை வச்சே மிரட்டுறாங்க என்றும், பிரசன்னா, ரகுவரனா மாறிட்டு வருகிறார் என்றும் செம விமர்சனம் கொடுத்துள்ளார்.
ரம்யா பாண்டியன் விமர்சனம்
தனது இடுப்பழகை காட்டி தமிழ்நாட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்த நடிகை ரம்யா பாண்டியன், காலையிலேயே மாஃபியா படத்தை பார்த்துவிட்டு, தனது விமர்சனத்தை வைத்துள்ளார். படம் அருமையா இருக்குது, கிளைமேக்ஸ் ட்விஸ்ட் சான்ஸே இல்லை.. அருண் விஜய், பிரசன்னா ஆக்டிங் சூப்புர் என பதிவிட்டுள்ளார்.
பிரசன்னா நன்றி
நடிகை ரம்யா பாண்டியன் மாஃபியா படத்தை பார்த்து விட்டு இப்படியொரு விமர்சனத்தை கொடுத்துள்ளதை அறிந்த நம்ம அப்கமிங் ரகுவரன், நடிகர் பிரசன்னா, தனது நன்றியை கமெண்ட் மூலம் தெரிவித்துள்ளார். இதுதான் ரம்யா பாண்டியனின் ஒரிஜினல் ஐடி நோட் பண்ணிக்கோங்க மக்களே!
வித்தியாசமான கிளைமேக்ஸ்
மாஃபியா படத்தைத் பார்த்துட்டு வந்த எல்லோரும், காலை முதலே படத்துல வித்தியாசமான கிளைமேக்ஸ் இருக்குதுன்னும், கிளைமேக்ஸ் சூப்பர் என்றும், தங்கள் வாழ்த்துக்களை மாஃபியா படக்குழுவுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த ரசிகரும், மாஃபியா படத்தின் கிளைமேக்ஸ் சான்ஸே இல்லை என பதிவிட்டுள்ளார்.
இந்த வார வின்னர்
அருண் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தடம் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள மாஃபியா படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். வெள்ளிக்கிழமையான இன்று 5 படங்கள் வெளியாகி உள்ளன. அதில், மாஃபியா தான் வின்னர் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
சேப்டர் 2 இருக்கு
மாஃபியா சேப்டர் 1 என்ற டைட்டிலிலேயே மாஃபியா படத்தின் அடுத்த அடுத்த சேப்டர் படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே போலவே, மாஃபியா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், இரண்டாம் பாகத்துக்கான லீடு அருமையாக வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்திற்காக வெயிட்டிங் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











