எத்திராஜ் மாணவிகளுடன் செல்ஃபி வீடியோ.. வேடன் வந்தாச்சோ பாடல் புரொமோ.. அருண் விஜய் செம்ம ஹாப்பி!

சென்னை: எத்திராஜ் கல்லூரி மாணவிகளுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை சற்று முன் பகிர்ந்த நடிகர் அருண் விஜய், தற்போது 'வேடன் வந்தாச்சோ' பாடல் புரொமோவை வெளியிட்டுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள மாஃபியா படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'வேடன் வந்தாச்சோ' பாடல் வரும் வெள்ளிக் கிழமை ரிலீசாகிறது. அதன் புரொமோ வீடியோவை தற்போது அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாஃபியா இயக்குநர்

மாஃபியா இயக்குநர்

மாஃபியா படத்தின் ரிலீஸை முன்னிட்டு புரொமோஷன் நிகழ்ச்சிகளில் அருண் விஜய் மற்றும் மாஃபியா படக்குழுவினர் பிஸியாகி உள்ளனர். இன்று எத்திராஜ் கல்லூரிக்கு சென்று படத்தை புரொமோட் செய்த அருண் விஜய், மாணவிகளுடன் எடுத்த க்ரூப் செல்ஃபி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

மாஃபியா

மாஃபியா

போதைப் பொருள் கடத்தல் கதையாக மாஃபியா படம் உருவாகி உள்ளது. தந்திரமான நரியாக பிரசன்னா நடித்துள்ளார். வேட்டை ஆடும் சிங்கமாக அருண் விஜய் மிரட்டியுள்ளார். மேயாத மான், மான்ஸ்டர் படத்தில் அமைதி பெண்ணாக நடித்த பிரியா பவானி சங்கர் மாஃபியாவில் ஆக்‌ஷன் அவதார் எடுத்துள்ளார்.

கண்டிப்பா ஹிட்

கண்டிப்பா ஹிட்

லைகா நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஃபியா படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது. நிச்சயம் இந்த படம் அருண் விஜய் சினிமா கரியரில் பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பாக்ஸர், சினம் உள்ளிட்ட படங்களிலும் அருண் விஜய் நடித்து வருகிறார்.

மாணவிகளுடன்

மாஃபியா படத்தின் ரிலீஸை முன்னிட்டு புரொமோஷன் நிகழ்ச்சிகளில் அருண் விஜய் மற்றும் மாஃபியா படக்குழுவினர் பிஸியாகி உள்ளனர். இன்று எத்திராஜ் கல்லூரிக்கு சென்று படத்தை புரொமோட் செய்த அருண் விஜய், மாணவிகளுடன் எடுத்த க்ரூப் செல்வி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

பாடல் புரொமோ

மேலும், வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள மாஃபியா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'வேடன் வந்தாச்சோ' பாடல் புரொமோ வீடியோவையும் பதிவிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி யுள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையில் வித்தியாசமாக உருவாகி உள்ள இந்த பாடலை இளம் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X