கணவன் டார்ச்சர் செய்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகராசி நடிகை.. கர்ப்பத்திற்கு பாதிப்பு!
சென்னை :மகராசி, கேளடி கண்மணி போன்ற சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் திவ்யா ஸ்ரீதர்.
இவர் நடிகர் அர்னவுடன் இணைந்து கடந்த 2017ம் ஆண்டில் வெளியான கேளடி கண்மணி சீரியலில் நடித்திருந்தார்.
அப்போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அந்தப் பழக்கம் லிவ்-இன் பழக்கமாக மாறி, திருமணத்திலும் முடிந்துள்ளது.

சீரியலில் இணைந்து நடித்த திவ்யா -அர்னவ்
கடந்த 2017ம் ஆண்டில் கேளடி கண்மணி என்ற தொடர் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் திவ்யா ஸ்ரீதர். அந்த சீரியலில் அவருடன் இணைந்து நடித்த அர்னவுடன் இவருக்கு பழக்கமாக இருவரும் இணைந்து இரண்டு ஆண்டுகள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர்.

பதிவுத் திருமணம் செய்த ஜோடி
இதையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் இருவரும் பதிவுத் திருமணம் செய்த நிலையில், அதை வெளியில் அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீடியோ மற்றும் புகைப்படங்கள்மூலம் தன்னுடைய திருமணத்தை அறிவித்தார் திவ்யா ஸ்ரீதர்.

கணவர் டார்ச்சர் என குற்றச்சாட்டு
இதனிடையே தற்போது மருத்துவமனையில் இருந்தபடி அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை தன்னுடைய கணவன் அடித்து துன்புறுத்துவதாகவும் தான் கர்ப்பமாக உள்ள நிலையில், தன்னை காலில் போட்டு மிதித்ததால் தன்னுடைய கருவிற்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கருவிற்கு பாதிப்பு
தன்னை வயிற்றில் அர்னவ் அடித்ததால் தனக்கு தற்போது கரு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கலையலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் அவர் அழுதபடி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அர்னவிற்கு தற்போது மற்றொரு சீரியல் நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால்தான் தன்னை தவிர்க்க நினைப்பதாகவும் திவ்யா மேலும் கூறியுள்ளார்.

கணவர் அர்னவ் மிரட்டல்
தன்னுடைய கல்யாண வீடியோவை தான் வெளியிட்டதில் இருந்து தன்னை அர்னவ் டார்ச்சர் செய்து வருவதாக தெரிவித்துள்ள திவ்யா ஸ்ரீதர், கர்நாடகாவில் இருந்து இங்கே வந்து இந்த வேலை பார்க்கிறாயா, இது என்னுடைய ஊர், இங்கே எனக்கு ஆதரவாக நிறைய பேர் வருவார்கள் என்று கூறி தன்னை மிரட்டுவதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் டார்ச்சர்
அர்னவின் தந்தையும் தன்னை மிரட்டுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். சீரியல் வாய்ப்பில்லாமல் அர்னவ் வீட்டில் இருந்தபோது அவனுடைய லோனையும் சேர்த்து தான் கட்டி, அவனை குழந்தை போல பார்த்துக் கொண்டேன், ஆனால் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும், தனக்கு உணவு கொடுக்காமல் ஸ்விகியில் ஆர்டர் செய்து தனியாக சாப்பிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுவாரா அர்னவ்?
திவ்யா ஸ்ரீதரின் இந்த வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ள நிலையில், அர்னவ் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், சீரியல் நடிகை இவ்வாறு துன்புறுத்தப்பட்டது சீரியல் வட்டாரத்தில் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











