தனுஷிற்கு வில்லனான மகேந்திரன்... ஐதராபாத்தில் டி43 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பு

ஐதராபாத் : மாஸ்டர் படத்தின்மூலம் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார் மாஸ்டர் மகேந்திரன்.

அவர் அடுத்ததாக தனுஷின் டி43 படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

இதையொட்டி தற்போது ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் டி43 படத்தின் சூட்டிங்கில் அவர் பங்கேற்றுள்ளார்.

டி43 படம்

டி43 படம்

நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் ஆகியோர் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் டி43. கார்த்திக் நரேன் இயக்கத்தில் இந்த படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவுற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மகேந்திரன் பங்கேற்பு

மகேந்திரன் பங்கேற்பு

தி க்ரே மேன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து தனுஷ் திரும்பிய நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் டி43 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங்கில் மாஸ்டர் மகேந்திரன் பஙகேற்றுள்ளார்.

வைரலான புகைப்படங்கள்

வைரலான புகைப்படங்கள்

சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கேரக்டரில் இவர் நடித்திருந்தார். இந்த கேரக்டர் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் இவர் தற்போது டி43 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Recommended Video

'Vijay Uncle கூட நடிக்கணும்' குட்டி பையன் Rithu Interview | Tamil Filmibeat
சிறப்பான கேரக்டர்

சிறப்பான கேரக்டர்

இந்த படத்திலும் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆன பின்பு மாஸ்டர் படத்தை போலவே இவருக்கு மேலும் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிவரும் டி43 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X