ஆதித்ய வர்மாவோடு சேர்ந்து ரேஸில் இறங்கும் மேகி திரைப்படம்!
சென்னை: ஆதித்யவர்மாவோடு சேர்ந்து மேகி திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.
துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ஆதித்யவர்மா' என்ற திரைப்படம் நவம்பர் 8ம் தேதி வெளியாக உள்ளதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டு அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின.
இந்நிலையில் இந்தப்படம் வரும் 22ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்யவர்மா படத்துடன் மேகி படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.

மேகி படம்
சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி ' என்ற திரைப்படம் நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது .இப்படம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கவரக் கூடிய வகையில் அமைந்து உள்ளது.

இளம் நடிகைகள்
இது முழுக்க முழுக்க கொடைக்கானல் காட்டு பகுதியையும் அதைச் சுற்றி உள்ள அழகான பங்களாவையும் மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதை. இளமை ததும்பும் மூன்று கதாநாயகிகள் ரியா, நிம்மி ,ஹரிணி நடித்து உள்ளனர்.

ஒளிப்பதிவு, இசை
டவுட் செந்தில், திடியான், அஜித் பிரகாஷ், லியோ, ரகு, திலக் ஷங்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேகி படத்திற்கு மணி ராஜூ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரபாகரன் மெய்யப்பன் இசையமைத்திருக்கிறார்.

ஆதித்யவர்மாவோடு..
பவர் சிவா நடன இயக்குநராக செயல்பட்டிருக்கிறார். ஸ்டீவன் சதீஷ் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ஆதித்யவர்மாவோடு சேர்ந்து களம் காண உள்ளது.


Click it and Unblock the Notifications











