4 ஆண்டுகள் ஆனாலும் நாங்க தான் டாப்.. யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ’மறுவார்த்தை’!

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா ஒருவழியாக பல சோதனைகளை கடந்து வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு வெளியிடப்பட்ட மறுவார்த்தை புரமோ வீடியோ யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

நேற்று தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியான நிலையில், அதனை மிஞ்சி தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகள்

4 ஆண்டுகள்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு ஆண்டுகளாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் இறுதி நேரத்தில் நிதி நெருக்கடியால் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில், வரும் நவம்பர் 29ம் தேதி படம் வெளியாகிறது.

போட்டி

போட்டி

தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், அதற்கு போட்டியாக சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது. தனுஷின் விஐபி மற்றும் வடசென்னையில் சமுத்திரகனி இணைந்து நடித்திருந்த நிலையில், முதல் முறையாக எதிர்த்து போட்டியிடுகிறார்.

மேஜிக் மறுவார்த்தை

மேஜிக் மறுவார்த்தை

கெளதம் மேனன் முதல் முறையாக தார்புகா சிவாவை இசையமைப்பாளராக எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் அறிமுகப்படுத்தினார். சித் ஸ்ரீராம் குரலில், 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான மறுவார்த்தை பாடல் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பலரது காலர் ட்யூனாக இருப்பது அதன் மேஜிக்கை காட்டுகிறது.

யூடியூப் டிரெண்டிங்

இந்நிலையில், நேற்று மறுவார்த்தை பாடலின் 21 நொடிகள் வீடியோ புரமோ படக்குழுவால் வெளியிடப்பட்டது. தனுஷ் மற்றும் மேகா ஆகாஷை பார்த்த ரசிகர்கள் ஒருவழியாக படத்தை பார்த்து விடலாம் என்ற ஆரவாரத்தில் பாடலை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X