Vidaamuyarchi: ரெடியா இருங்க ஃபேன்ஸ்.. டைம் குறிச்சாச்சு.. விடாமுயற்சி டிரைலரால் அதிரப்போகும் இணையம்
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், நடித்து வெளியாகவுள்ள படம் விடாமுயற்சி. படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். அஜித்குமாரின் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் பிரேக் டவுன் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என கூறப்படுகின்றது. படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில், டிரைலர் மாலை 6.40 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு இப்போது தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த டிரைலர் சன் டீவி யூடியூப் தளத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விடாமுயற்சி டிரைலர் என ஆங்கிலத்தில் எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றது.
அஜித்குமார் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி, கடந்த ஆண்டு தீபாவளிக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி, தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. லைகா நிறுவனத்துடன் அஜித்குமார் இணைந்துள்ள இந்தப் படத்தினை மகிழ் திருமேனி இயக்குகின்றார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். கடைசியாக அஜித் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு துணிவு படம் ரிலீஸ் ஆனது.

அதன் பின்னர் கமிட் ஆன விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் ஒரு கட்டத்திற்கு மேல், வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு அப்செட்டினைக் கொடுக்க, படம் கைவிடப்பட்டது என தகவல்கள் இணையத்தில் வெளியாக, இது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. படக்குழு தரப்பில் இருந்து படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட காட்சியை வெளியிட்டனர். கோரமான விபத்தில் அஜித் மற்றும் ஆரவ் மாட்டிக் கொண்டது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. மேலும் இந்த அளவிற்கு ஆபத்தான முறையில் படப்பிடிப்பினை நாங்கள் நடத்தி வருகின்றோம், எக்காரணம் கொண்டும் தேவையில்லாத வதந்திகளை ரசிகர்கள் நம்பவேண்டாம் எனக் கூறினார்கள். அதன் பின்னர்தான் ரசிகர்களுக்கு நிம்மதியே வந்தது.
விடாமுயற்சி: விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு பின்னர் அஜித் கமிட் ஆன, குட் பேட் அக்லி படம் 2025ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என்ற அறிவிப்புடனே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதுவரை நிதானமாக படத்தினை இயக்கிவந்த மகிழ் திருமேனி, அதன் பின்னர் படத்தினை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். கடைசியாக இந்த ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவித்தது படக்குழு. இதனால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி மாறிப்போனது. ஆனால் படத்தினை சில தவிர்க்கமுடியாத காரணங்களால், பொங்கலுக்கு ரிலீஸ் செய்யமுடியவில்லை என படக்குழு தெரிவித்தது. இது ரசிகர்களுக்கு அப்செட் கொடுக்க, ஒரு வழியாக படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.

டிரைலர்: இப்படியான நிலையில் படத்தின் டிரைலர் இன்று அதாவது ஜனவரி 16ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் நேற்றைய அறிவிப்பில் டிரைலர் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்யப்படும் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்தது. இப்படியான நிலையில் படத்தின் டிரைலரை மாலை 6.40 மணிக்கு ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
படம் ரிலீஸ்: மேலும் படத்தினை வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிரைலருடன் சேர்ந்து அறிவிக்கப்படும் என்ற பேச்சு அடிபடுகின்றது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











