மீகாமன்.... மகிழ் திருமேனி - ஆர்யாவின் புதுப்படம்!

By Shankar

சாண்டில்யன், நா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் சரித்திர நாவல்களை அதிகம் படித்திருப்பார் போலிருக்கிறது இயக்குநர் மகிழ் திருமேனி.

ஆர்யாவை வைத்து ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில் உருவாகும் தனது அடுத்த படத்துக்கு மீகாமன் (Meegaamann) என்று பெயர் சூட்டியுள்ளார்.

ஏன் இந்தத் தலைப்பு? - இன்று மகிழ் திருமேனியைச் சந்தித்த போது இதைக் கேட்டோம்..

இப்போது நீங்கள் கேட்கிறீர்கள் பாருங்கள்.. இதே கேள்வியை தலைப்பைப் படிக்கும் அத்தனை பேரும் கேட்க வேண்டும். அதற்காகவே இந்தத் தலைப்பு. அதே நேரம் அர்த்தமில்லாமல் வெறும் அலங்காரத்துக்காக இந்தப் பெயரை வைக்கவில்லை.

மீகாமன் என்றால் ஒரு கப்பலின் தலைவன் என்று அர்த்தம். அந்தப் பதவிக்கே உரிய கம்பீரம் இந்த தலைப்பில் தெரிகிறதல்லவா... அதனால்தான் இந்தப் பெயரைத் தேர்வு செய்தேன்.

அப்படின்னா இது கடல் சார்ந்த படமா?

அப்படின்னா இது கடல் சார்ந்த படமா?

அப்படிச் சொல்ல முடியாது. இது ஒரு வணிக நோக்கிலான பொழுதுபோக்குப் படம். ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர். கடல் இந்தக் கதையில் வருகிறதா இல்லையா என்பதை கொஞ்ச நாள் அவரவர் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

படத்தின் ஹீரோயின்...

படத்தின் ஹீரோயின்...

தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அறிவிக்கவிருக்கிறோம். நிச்சயம் புதுமுகம் இல்லை. வணிக ரீதியில் பிரபலமானவராகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆர்யா இந்தக் கதைக்கு எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கிறார்?

ஆர்யா இந்தக் கதைக்கு எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கிறார்?

அவர் கேரியரில் இந்தப் படம் வேறு பரிமாணத்தில் அமையும் என சொல்லும் அளவுக்கு ஆர்யா இந்தக் கதையில் பொருந்திப் போனார். கதை கேட்ட நாளிலிருந்து இந்தப் படம் குறித்த அவரது ஈடுபாடு அபாரமானது.

இசை..

இசை..

தமன்தான் இசையமைக்கிறார். பாடல் கம்போசிங் தொடங்கிவிட்டது.

கடல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்துவீர்களா...

கடல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்துவீர்களா...

அதுவும் இருக்கும். பெரும்பகுதி ஷூட்டிங் கோவாவில் நடக்கும். கொஞ்சம் சென்னையில்.

இது வேறு மொழியிலும் தயாராகிறதா..?

இது வேறு மொழியிலும் தயாராகிறதா..?

ஆமாம் தெலுங்கிலும் நேரடிப் படமாக வரும். தலைப்பு யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

படம் குறித்த பொதுவான தகவல்கள் இருந்தால் சொல்லுங்கள்..

டெக்னிக்கலாக இந்தப் படத்தில் எந்தப் புதிய தொழில்நுட்பத்துக்கும் போகவில்லை. டிஜிட்டலில் எடுக்கிறோம். இந்தப் படத்துக்காக வெளிநாடு செல்லும் அவசியமேற்படவில்லை. தயாரிப்பாளர்தான் போகலாம் என்கிறார். நான் வேண்டாம் என சொல்லிவிட்டேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X