த்ரிஷா தான் வில்லியா?.. விடாமுயற்சி கதையில் செம ட்விஸ்ட் வைத்திருக்கிறாரா மகிழ் திருமேனி?
சென்னை: லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், கண்டிப்பாக இந்த படம் பிரேக்டவுன் படத்தின் தழுவல் தான் என ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர். படம் வெளியாகும் போது லியோ படம் போட்டது போல நன்றி கார்டு போடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
1997ம் ஆண்டு ஜானதன் மாஸ்டோவ் இயக்கத்தில் கர்ட் ரஸல், ஜே.டி. வால்ஷ், காத்லீன் குயின்லன் நடிப்பில் வெளியான சீட் எட்ஜ் த்ரில்லர் படம் தான் பிரேக்டவுன். அந்த படத்தைத் தான் விடாமுயற்சி என மகிழ் திருமேனி இயக்கியுள்ளார் என்கின்ற்னர்.

ஆனால், அந்த படத்தை அப்படியே எடுக்காமல், கொஞ்சம் வேறமாதிரியான ட்விஸ்ட்டையும் மகிழ் திருமேனி விடாமுயற்சி கதையில் சேர்த்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித்தின் விடாமுயற்சி: எல்லாமும் உன்னை கைவிடும் போது உன்னை நம்பு என்கிற டேக் லைன் உடன் விடாமுயற்சி டீசர் நேற்று வெளியாகி டிரெண்டிங்கில் தெறித்து வருகிறது. லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை 6 மாதங்கள் நிறுத்தி வைத்தாலும் டீசரை பார்க்கும் போது ஹாலிவுட் தரத்திலேயே உருவாகியிருக்கிறது. வரும் பொங்கலுக்கு அஜித் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது என்றூம் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக விடாமுயற்சியை அஜித் ரசிகர்கள் மாற்ற போகிறோம் என்றும் கூறி வருகின்றனர்.
பிரேக்டவுன் கதை: நீண்ட தூர கார் பயணத்தை தனது மனைவியுடன் செய்யும் நாயகன் ஒரு கட்டத்தில் கார் பிரேக் டவுன் ஆக சாலையில் வரும் டிரக் ஒன்றில் ஏறிக் கொண்டு மனைவி அருகே இருக்கும் மெக்கானிக்கை அழைத்து வருகிறேன் என்று செல்ல அவர் திரும்ப வராமல் போக தனது காரை சரி செய்துக் கொண்டு தனது மனைவியை தேடி ஹீரோ அலைவதும், அவர் சந்திக்கும் மனிதர்கள் எல்லாம் அவரை ஏமாற்றவும் கடைசியில் தனது மனைவியை அவர் எபப்டி கண்டுபிடித்தார் என்றும் வில்லனை எப்படி இருவரும் சேர்ந்து பழிவாங்கினர் என்பது தான் பிரேக்டவுன் படத்தின் கதை.
த்ரிஷா தான் வில்லியா?: ஆனால், அந்த கதையை கொஞ்சம் மாற்றி த்ரிஷாவையே வில்லியாக வைத்து ஹீரோவிடம் உள்ள பணத்தை பறிக்க ஹீரோயின் கடத்தல் நாடகம் ஆடுவதாக விடாமுயற்சி படத்தின் கதையை சற்றே மாற்றியமைத்திருக்கிறார் மகிழ் திருமேனி என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இது எந்தளவுக்கு உண்மை என்றூ தெரியவில்லை. த்ரிஷாவை காப்பாற்றுவது மட்டுமே படமாக இருக்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், இப்படியொரு ட்விஸ்ட் இருந்தாலும் செமையா இருக்கும் என்றும் ரசிகர்கள் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆனால் போதும் என்கிற மனநிலையுடன் உள்ளனர்.
வொர்க் பேசும்: படத்தின் கதையை எல்லாம் தாண்டி மகிழ் திருமேனியின் ஸ்க்ரீன்பிளே மற்றும் அஜித்தின் நடிப்பு பேசும் என்றும் வில்லனாக அஜித்தும் அவரது மனைவியாக ரெஜினா கசாண்ட்ராவும் கலக்க காத்திருக்கின்றனர் என்றும் போல்டான லேடியாக த்ரிஷா ஒவ்வொரு ஃப்ரேமிலும் தூள் கிளப்பப்போகிறார் என்றும் கூறுகின்றனர். பொங்கலுக்கு குட் பேட் அக்லி படம் கண்டிப்பாக வராது என்றும் விடாமுயற்சி மட்டுமே வெளியாகும் என்றும் பிப்ரவரி அல்லது மே மாதம் குட் பேட் அக்லி தள்ளிப்போகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











