அஜித்தின் விடாமுயற்சியை எதற்காக பார்க்க வேண்டும்?.. இயக்குநர் என்ன சொல்றாரு பாருங்க!
சென்னை: அஜித்தின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் விடாமுயற்சி. நீண்ட தாமதத்துக்கு பிறகு பிப்ரவரி ஆறாம் தேதி இப்படம் ரிலீஸாகவிருக்கிறது. முதன்முறையாக மகிழும், அஜித்தும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. கடைசியாக அஜித் நடித்து வெளியான துணிவு திரைப்படம் போலவே இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்று அஜித்தின் ரசிகர்கள் எக்கச்சக்க நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.
துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது அடுத்த படத்தில் கமிட்டானார் அஜித். எப்போதும் ஒரு படத்தை முடித்துவிட்டுத்தான் இன்னொரு படத்துக்கு கமிட்டாவார். ஆனால் அந்த ரூலை அவர் பிரேக் செய்ததால் அஜித் ஃபுல் பார்மில் இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறினார்கள். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க கமிட்டானார். ஆனால் சில பல காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விக்னேஷ் வெளியேறினார் அல்லது வெளியேற்றப்பட்டார்.

விடாமுயற்சி மகிழ் திருமேனி: அவருக்கு பிறகு அஜித்தின் படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. அனிருத் இசையமைக்க அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்திருக்கிறார்கள். முதலில் மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித்துக்கு பிடித்ததாகவும்; ஆனால் அதை பிறகு செய்துகொள்ளலாம்; பிரேக் டவுன் என்ற படத்தின் கதையை தழுவி இந்தப் படத்தை உருவாக்க அஜித் ஐடியா கொடுத்ததாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
முடிந்த ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. விறுவிறுவென்று ஷூட்டிங் முடியுமென்று பார்த்தால் ரொம்பவே தாமதமாக நடந்தது. இதனால் வலிமை படத்துக்கு எப்படி அப்டேட் கிடைக்காமல் ஏகே ரசிகர்கள் திண்டாடினார்களோ அதுபோல் இந்தப் படத்தின் அப்டேட்டுக்காகவும் ரொம்பவே காத்திருந்தார்கள். படக்குழுவோ எந்தவிதமான அப்டேட்டையும் விடாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் ரொம்பவே சோர்வடைந்தார்கள். ஒருவழியாக ஷூட்டிங் முடிந்துவிட்டது என்று அறிவிப்பு வந்தது.
பிப்ரவரியில் ரிலீஸ்; அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் முதலில் வெளியானது. அதன் பிறகு படத்தின் ட்ரெய்லரும், இரண்டு சிங்கிள்களும் ரிலீஸாகின. படமானது ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸானது பிப்ரவரி ஆறாம் தேதிக்கு ரிலீஸாகவிருக்கிறது. ரிலீஸுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் இயக்குநர் மகிழ் திருமேனி மும்முரமடைந்திருக்கிறார். அந்தவகையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
மகிழ் திருமேனி பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "அஜித்தை இதுவரை நாம் பல மாதிரியாக பார்த்திருப்போம். ஒரு ஸ்டைலிஷான நடிகர், ஒரு மிகப்பெரிய ஹீரோ, நல்ல நடிகர் என்று பல படங்களில் பல விதங்களாக பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அஜித்தின் நடிப்பை பார்த்து ரசிப்பதற்காகவே விடாமுயற்சி படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். அதேபோல் இந்தப் படத்தில் எல்லா சண்டைக் காட்சிகளையும் அவரேதான் செய்தார். டூப் போடவில்லை. அதை பார்த்து நான் ரொம்பவே ஆச்சரியப்பட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











