அஜித்தின் விடாமுயற்சி.. மகிழ் திருமேனி வைத்த ட்விஸ்ட்.. என்ன ஆகப்போகுதோ?.. ரசிகர்கள் ஷாக்

சென்னை: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான அந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேசமயம் இந்தப் படம் பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்பதும் உறுதியாகியிருக்கிறது. இந்தச் சூழலில் விடாமுயற்சி படம் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே ஷாக்கை கொடுத்திருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு அஜித் நடித்த துணிவு படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார் ஏகே. இதில் அவருடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. மகிழுடன் அஜித் சேர்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்களிடம் இந்தப் படம் பற்றிய ஆர்வம் தொற்றிக்கொண்டது.

ajith vidaamuyarchi magizh thirumeni

ஏன் அந்த ஆர்வம்?: இந்தக் கால தலைமுறை இயக்குநர்களில் எத்தனையோ பேர் ஸ்பெஷலாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஸ்பெஷல் லிஸ்ட்டில் இருப்பவர்தான் மகிழ் திருமேனி. செல்வராகவன், கௌதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்களை இயக்கியிருக்கிறார். இந்தப் படங்கள் அனைத்துமே ஆக்‌ஷன் ப்ளஸ் த்ரில்லர் ஜானரில் உருவானவை. மேலும் இந்தப் படங்கள் நல்ல ஹிட்டும் ஆகியிருக்கின்றன. எனவே அஜித்தை அவர் எவ்வாறு ட்ரீட் செய்திருக்கிறார் என்ற ஆர்வம் இயல்பாகவே ரசிகர்களிடம் இருக்கிறது.

பிரேக் டவுன் தழுவல்: இந்தப் படம் பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று ஆரம்பத்திலிருந்தே தகவல்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால் இதுகுறித்து படக்குழு மூச்சு விடாமல் இருந்தது. ஆனால் படத்தின் டீசர் அதனை உறுதி செய்துவிட்டது. இதனையடுத்து நஷ்ட ஈடு கேட்டு பிரேக் டவுன் படக்குழு லைகா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இதன் காரணமாகத்தான் விடாமுயற்சியின் ரிலீஸும் தள்ளிப்போனதாக கோடம்பாக்க பச்சிகள் கூறின.

பிப்ரவரியில் ரிலீஸ்: முதலில் இந்தப் படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் பிப்ரவரி 6ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. அதற்கு காரணமே பிரேக் டவுன் படக்குழு கொடுத்த குடைச்சல்தான் எனவும் ஒரு தகவல் உலாவுகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து மகிழ் திருமேனி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த ஒரு பேட்டியில், "கலகத் தலைவன் படத்தின் ரிலீஸுக்கு பிறகு அஜித்தின் மேனேஜர் என்னை தொடர்புகொண்டு படத்தில் எதுவும் கமிட்டாகியிருக்கிறீர்களா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன்.

அஜித்தின் விருப்பம்: பிறகு அவர் என்னிடம் அஜித் உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் என்று சொன்னார். அஜித்தும் பிறகு அதனை உறுதி செய்தார். தயாரிப்பாளரை சந்திப்பதற்காக லண்டன் சென்றோம்.அப்போதுதான் அஜித்தை முதன்முதலாக நேரில் பார்த்தேன். அப்போதுவரை அஜித்தின் 63ஆவது படத்தைத்தான் என்னை இயக்க சொல்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் 62ஆவது படத்தின் இயக்குநர் என்று சொன்னார்கள். எனது கதை இல்லாமல் இன்னொரு கதையை இயக்குவது இதுதான் முதன்முறை. கதை என்னுடையது இல்லையென்றாலும் திரைக்கதையில் நல்ல பங்களிப்பை கொடுத்திருக்கிறேன்.

பெண்களுக்கு பிடித்த படம்: அஜித்துக்கு எப்போதுமே ஆணாதிக்கமோ, பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறையோ பிடிக்காது. விடாமுயறி ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த படமாக இருக்கும். இதில் அஜித் துறுதுறுப்பாக இருப்பார். பெண்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கும். எங்களுடன் அஜித் நெருக்கமாகிவிட்டார். அதனால் அவரைப் பற்றியும், எங்களை பற்றியும், படத்தை பற்றியும் வரும் விமர்சனங்களை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எது உண்மை என்று அவருக்கு தெரியும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X