தனுஷை கட்டாயப்படுத்தி அதை செய்ய வச்சாங்க.. அவருக்கு அதுல இஷ்டமே இல்லை.. மகிழ் திருமேனி ஓபன் பேட்டி!
சென்னை: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிப்பு அசுரனாக அசத்தி வரும் தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமே இல்லை என்றும் அவரை அவரது அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் வற்புறுத்தி சினிமாவில் நடிக்க வைத்ததாக இயக்குநர் மகிழ் திருமேனி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சினிமாவில் அப்பாவோ அம்மாவோ இருந்தால் குழந்தைகளுக்கு நாமும் சினிமாவில் பெற்றோர்களை போலவே நட்சத்திரமாக வேண்டும் என்கிற ஆசையும் கனவும் அதிகமாகவே வந்துவிடும். ஏகப்பட்ட வாரிசு நடிகர்கள் உருவாக காரணமும் அதுவாகவே உள்ளது.

ஆனால், தனுஷை பொறுத்தவரையில் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பமே இல்லை என விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.
விடாமுயற்சி புரமோஷன்: லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து விடாமுயற்சி திரைப்படம் பெண்களுக்கான படம் என்றும் அந்த படம் வரும் தேதி பண்டிகை தேதியாக மாறும் என அஜித் சார் சொன்னார் என பேசி ஹைப்பை கிளப்பி வருகிறார்.
செல்வராகவனின் அசிஸ்டண்ட்: இயக்குநர்கள் செல்வராகவன் மற்றும் கெளதம் மேனனின் உதவி இயக்குநர் தான் மகிழ் திருமேனி என்பது குறிப்பிடத்தக்கது. துள்ளுவதோ இளமை படத்திலேயே செல்வராகவனிடம் உதவி இயக்குநராக மகிழ் திருமேனி பணியாற்றியுள்ளார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களில் கெளதம் மேனனுக்கு உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் தான் தரமான படங்களை இயக்கும் திறமையை மகிழ் திருமேனிக்கு கொடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
தனுஷுக்கு விருப்பமில்லை: அப்பா கஸ்தூரி ராஜாவுக்குப் பிறகு செல்வராகவன் சினிமாவில் நுழைந்தார். ஆனால், தனுஷுக்கு சினிமாவில் நடிகனாக வேண்டும் என்கிற ஆசை துளி கூட இல்லை. அவர் கேட்டரிங் எல்லாம் படித்துக் கொண்டு வேறு ஒரு பாதையை தேர்வு செய்ய நினைத்த நிலையில், அவரை செல்வராகவன் கட்டாயப்படுத்தித் தான் நடிகராக மாற்றினார். ஆனால், இன்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மிகப்பெரிய நடிகராக தனுஷ் மாறியுள்ளார் என மகிழ் திருமேனி தனது பேட்டியில் தனுஷின் ஃபிளாஷ்பேக் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை: ரத்தத்திலேயே சினிமா இருந்ததால் தான் ஆரம்பத்தில் நடிக்கவே பிடிக்காமல் சினிமாவில் நுழைந்த தனுஷ் இன்று கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிப்பு அசுரனாக மாறியிருக்கிறார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் அனைத்து துறைகளிலும் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை, குபேரா உள்ளிட்ட படங்கள் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த காத்திருக்கின்றன. கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் 150 கோடி வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தியில் ஒரு படத்திலும், ஹாலிவுட்டில் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











