AK 62: மாஸ் காட்டுறாரே மகிழ் திருமேனி.. அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க இத்தனை கோடி சம்பளமா?
சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தின் அலுவலத்திற்கு பூஜை போடப்பட்டு இயக்குநர் மகிழ் திருமேனி ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்து விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் அஜித் குமாரை வைத்து புதிதாக டைட்டில் ப்ரோமோ ஒன்றை மகிழ் திருமேனி இயக்கி வருவதாகவும் மார்ச் 2வது வாரத்தில் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனிக்கு இந்த படத்தில் வழங்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல்களும் கசிந்துள்ளன.

மார்ச்சில் அதிரடி ஆரம்பம்
லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிக்க உள்ள ஏகே 62 படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 2வது வாரம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மகிழ் திருமேனி தான் இயக்குநர் என அஜித் குமாரும் லைகா நிறுவனமும் உறுதி செய்துள்ள நிலையில், அவருக்கு தனியாக ஆபிஸ் ஒன்றையும் போட்டுக் கொடுத்து அதன் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றதாக கூறுகின்றனர்.

விக்னேஷ் சிவன் மாற்றம்
அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் என்றதுமே அஜித் ரசிகர்கள் லியோ படத்துக்கு போட்டியாக இருக்காதே என ஃபீல் செய்த நிலையில், விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். விக்னேஷ் சிவன் செய்த காலதாமதம் காரணமாக நடிகர் அஜித் அப்செட் ஆகி அவரை மாற்றி விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.

அஜித்துக்கு 105 கோடி
இதுவரை 100 கோடி சம்பளம் வாங்காத நடிகர் அஜித் முதல் முறையாக 105 கோடி சம்பளத்தை ஏகே 62 படத்தின் மூலமாகத்தான் வாங்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித்துக்கு 105 கோடி ரூபாய் சம்பளத்தையும் கணவர் விக்னேஷ் சிவனுக்கு 15 கோடி சம்பளத்தையும் நடிகை நயன்தாரா தான் ஆரம்பத்தில் லைகாவிடம் பேசியிருந்ததாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

மகிழ் திருமேனியின் சம்பளம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில், ஏகே 62 படத்தை இயக்க இயக்குநர் மகிழ் திருமேனிக்கு அதிகபட்சமாக 10 கோடி வரை சம்பளமாக வழங்க லைகா முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை 1 கோடி கூட சம்பளம் வாங்காமல் குறைந்த பட்ஜெட் படங்களை இயக்கி வந்த மகிழ் திருமேனிக்கு 10 மடங்கு அதிக சம்பளம் மற்றும் 200 கோடி பட்ஜெட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மிகப்பெரிய விஷயம் என கோடம்பாக்கத்தில் பலரும் பேசி வருகின்றனர்.

பெரிய பொறுப்பு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதே நேரத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்கள் பெரிதாக போகவில்லை. இந்நிலையில், ஏகே 62 படத்தை இயக்கும் பெரிய பொறுப்பு தனக்கு கிடைத்துள்ள நிலையில், ஆக்ஷன் காட்சிகளில் பெரிய சம்பவத்தை செய்யவும் திரைக்கதையை வலிமையானதாக மாற்றவும் இயக்குநர் மகிழ் திருமேனி தீவிரமாக உழைத்து வருவதாக கூறுகின்றனர்.

வேறலெவல் பிசினஸ்
அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் முறையாக நடிகர் அஜித்துக்கு ஓவர்சீஸ் மார்க்கெட்டுகளை திறந்து விட்டதை அறிந்து கொண்ட லைகா நிறுவனம் ஏகே 62 படத்தை வைத்து மிகப்பெரிய பிசினஸ் செய்யும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர். படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே நெட்பிளிக்ஸில் பெரிய தொகைக்கு இந்த படத்தை விற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











