Vidamuyarchi: ஒரு இன்ச் கூட நகராமல் நிற்கும் விடாமுயற்சி.. அஜித் படத்துக்கு அப்படி என்ன பிரச்சனை?
சென்னை: லைகா நிறுவனம் அஜித், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்கள் படங்களை தயாரித்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தப் போகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லால் சலாம் படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய தலைவலியாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் சமீபத்தில் சந்தித்த போது கூட ஹீரோக்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவருமே கலந்து கொள்ளவில்லை. அதிகம் எதிர்பார்த்து இருவரும் ஏமாந்துப் போயுள்ளனர் என்கின்றனர். இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஒரு இன்ச் கூட நகராமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜர்பைஜானில் இருந்து ரிட்டர்ன்: கடந்த ஆண்டு மே மாதம் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு மட்டும் வெளியானது. அதன் பின்னர் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் தகவல்கள் போட்டோக்களாகவும் வெளியாகின. முழுக்க முழுக்க அஜர்பைஜானில் படமாக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், குறிப்பிட்ட பட்ஜெட்டை கடந்து போய் விட்டதாக லைகா நிறுவனம் இனிமேல் செலவு செய்ய முடியாது என்கிற முடிவுக்கே வந்த நிலையில் தான் படக்குழுவினர் அஜர்பைஜானில் இருந்து ரிட்டர்ன் ஆனதாக கூறப்படுகிறது.
நைஸாக கழண்டு கொண்ட திரிஷா: நடிகை திரிஷா படத்துக்கு கொடுத்த கால்ஷீட் எப்போதோ முடிந்து விட்டது என்கின்றனர். தற்போது செர்பியாவில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார் திரிஷா. சிரஞ்சீவியின் தெலுங்கு படமான விஷ்வம்பரா படத்திலும் கமிட் ஆகி ஒரு ஷெட்யூல் நடித்திருக்கிறார் திரிஷா. விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்கிற நிலையில் தான் அவர் அடுத்தடுத்த படங்களுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
பேச்சு வார்த்தையில் இயக்குநர்: லைகா நிறுவனம் ஏற்கனவே நிறைய செலவு செய்து விட்ட நிலையில், சென்னையில் செட் போட்டு படத்தை உருவாக்க சொன்னதாகவும் அஜர்பைஜானில் படமாக்கினால் தான் அந்த அவுட்புட் கிடைக்கும் என மகிழ் திருமேனி ஒரே முடிவில் இருப்பதால் தயாரிப்பு நிறுவனத்துடன் தொடர்ந்து கூடுதல் பட்ஜெட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்கின்றனர். பேச்சுவார்த்தைக்கு லைகா நிறுவனம் சம்மதம் தெரிவித்தால் தான் மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பே தொடங்கும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குத்தான் படம் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











