அஜித் அதுக்கெல்லாம் கவலைப்படவில்லை.. விடாமுயற்சியை அப்படி எடுக்க காரணம் இதுதான்..இயக்குநர் ஓபன் டாக்

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த ஆறாம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அஜித்தை ஆக்‌ஷன் ஜானரில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை. அதேசமயம் அஜித்தை இந்த மாதிரி ஒரு படத்தில் பார்த்ததே இல்லை என்று இன்னொரு தரப்பு ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்தச் சூழலில் விடாமுயற்சி படம் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
அஜித்தை வைத்து மகிழ் திருமேனி படம் இயக்கப்போகிறார் என்கிற அறிவிப்பு வந்ததும் கண்டிப்பாக ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படமாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியானபோதுகூட அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால் பிறகுதான் தெரிந்தது இது பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என்று. மகிழும் சில பேட்டிகளில் இந்தப் படத்தின் கதை தன்னுடையது இல்லை; அஜித் கொடுத்த ஐடியாதான் என்று ஓபனாகவே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ajith vidaamuyarchi magizh thirumeni
விடாமுயற்சி ரிலீஸ்: இப்படிப்பட்ட சூழலில்தான் விடாமுயற்சி திரைப்படம் கடந்த ஆறாம் தேதி ரிலீஸானது. படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை. ஆக்‌ஷன் காட்சிகள் அஜித்துக்கு மாஸாக இல்லை; திரைக்கதையிலும் புதிதாக எதுவுமே இல்லை என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன. அதேசமயம் இன்னொரு தரப்பு ரசிகர்களோ, இவ்வளவு பெரிய ஹீரோ தனக்கான மாஸ் சீன்கள் அதிகம் இல்லாத படங்களில் நடிப்பது பெரிய விஷயம்; அஜித் நல்ல படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் என்று சப்போர்ட்டும் செய்துவருகிறார்கள்.
மகிழ் திருமேனி பேட்டி: படமானது வசூலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது. பலரும் மகிழ் திருமேனியை சகட்டுமேனிக்கு திட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இனி அஜித்துடன் திருமேனி இணைந்து படமே இயக்க வேண்டாம் என்று ஓபனாக சொல்லிவருகிறார்கள். இந்நிலையில் விடாமுயற்சி படத்தை ஏன் அப்படி உருவாக்கினோம் என்பது குறித்து ஒரு பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார் இயக்குநர். அதனைப் பார்த்த பலரும் சைலெண்ட் ஆக ஆரம்பித்திருக்கிறார்கள்.
மகிழ் என்ன சொன்னார்?: அவர் கொடுத்த பேட்டியில், “அஜித்தை வைத்து எடுக்க நான் ஆசைப்பட்டது ஆக்‌ஷன் படத்தைத்தான். ஆனால் அவர் என்னிடம், 'ஊரை காப்பாற்றும் கதை, நாட்டை காப்பாற்றும் கதை எல்லாம் வேண்டாம். ஒ ரு சென்சிபிளான எதார்த்தமான படத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்தப் படம் ஏற்புடையதாக இருக்க வேண்டும். எனவே அந்த மாதிரியான ஒரு படத்தை செய்வோம் என்று அஜித்தான் என்னிடம் முதன்முதலில் சொன்னார்.
கவலைப்படுபவர் இல்லை: அப்படி தொடங்கியதுதான் இந்தப் பயணம். படம் முழுவதும் நீங்கள் கவனித்தீர்கள் என்றால்; மிகப்பெரிய ஸ்டாருக்கு உண்டான த்தனை பிம்பத்தையும் உடைத்துக்கொண்டே வந்திருப்பார். ஒரு சாதாரண மனிதன் என்ன செய்வானோ அதைத்தான் செய்திருப்பார். இதை சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்வான், பாதிக்கப்படுவான் என்கிற விஷயத்தை அப்படியே படத்தில் காட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார். அப்படி காட்டும்போது அவரது இமேஜ் அடிவாங்கும்தான். ஆனால் அதற்கெல்லாம் அவர் கவலைப்படுபவர் இல்லை. கதை எது தேவையோ அதை செய்யுங்கள் என்று கூறிவிடுவார்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X