அஜித்தின் விடாமுயற்சி.. கதை என்ன தெரியுமா?.. மகிழ் திருமேனி கூறிய சூப்பர் அப்டேட்
சென்னை: அஜித்தின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் அப்படமானது முதலில் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போன சூழலில் ஜனவரி 23ஆம் தேதி படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் படத்தின் கதை குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.
அஜித்தின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க கமிட்டானார்.முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் விக்னேஷ் சொன்ன கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னதால் அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் அவர். அதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக ஆரம்பித்தது.

விடாமுயற்சி: இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் கமிட்டானார்கள். படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. ஆனால் ஷூட்டிங்கோ ரொம்பவே மெதுவாக நடந்தது. ஒருகட்டத்தில் லைகா நிறுவனத்துக்கு பொருளாதார நெருக்கடி வந்துவிட்டது; அதன் காரணமாக படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்தார்.
டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் படத்தின் முதல் சிங்கிளும் வெளியாகி அபாரமான ரெஸ்பான்ஸை பெற்றது. முதல் சிங்கிளின் லிரிக்கல் வீடியோவை பார்த்த ரசிகர்கள், அஜித் - திரிஷா கெமிஸ்ட்ரி பக்காவாக இருக்கிறதே என்று கொண்டாடினார்கள். இதற்கிடையே இந்தப் படமானது பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் முறையாக அனுமதி வாங்காததால் நஷ்ட ஈடு கேட்டது பிரேக் டவுன் படக்குழு.
ரிலீஸ் தாமதம்: அதன் காரணமாக முதலில் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாக வேண்டிய விடாமுயற்சி தள்ளிப்போய்விட்டது. அநேகமாக ஜனவரி 23ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிச்சயம் இத்தனை காலம் காத்திருந்ததற்கு படத்தில் முழு ட்ரீட்டை மகிழ் திருமேனி வைத்திருப்பார் என்று ஏகே ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் சமீபத்தில் பேட்டியளித்த மகிழ் திருமேனியிடம் விடாமுயற்சி படத்தின் கதை குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.
என்ன கதை?: அதற்கு பதிலளித்த அவர், "ஒரு மனிதனுடைய சோர்வடையாத தொடர் முயற்சிதான் இந்தப் படம். அஜித்துடைய கேரக்டருக்கு இந்தப் படத்தில் சின்ன சின்ன லேயர்ஸ்கள் இருக்கின்றன. படத்தின் கதைக் கருவுடன் உறவுகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமும் இருக்கிறது. அனைத்தையுமே ஒருசேர காப்பாற்றுவதற்காக ஒரு மனிதன் நடத்தக்கூடிய விஷயங்கள்தான் இந்தப் படத்தின் கதை" என்றார்.


Click it and Unblock the Notifications











