AK 62: ரிட்டர்ன் ஆன விக்னேஷ் சிவன்... லண்டன் பறந்த மகிழ் திருமேனி... விரைவில் அப்டேட்
சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கிவிருந்த நிலையில் விக்னேஷ் சிவன் விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகா புரோடக்ஷனுக்கும் திருப்தி இல்லை என்பதால் தான் இந்த மாற்றம் என சொல்லப்படுகிறது.
இதனையடுத்து ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விலகிய விக்னேஷ் சிவன்
அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவ்து முறையாக இணைந்து பாக்ஸ் ஆபிஸில் தரமான சமபவம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக அஜித் நடிக்கும் அவரது 62வது படம் குறித்து லைகா தரப்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், இப்போது ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனும் அனிருத்தும் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் இருந்து ரிட்டர்ன்
ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், தனது டிவிட்டரில் இருந்து அஜித்தின் கவர் போட்டோவை நீக்கிய விக்னேஷ் சிவன், Never Give Up என மோட்டிவேஷன் கேப்ஷனை வைத்துள்ளார். இதனால் ஏகே 62ல் இருந்து விலகியதை விக்னேஷ் சிவன் மறைமுகமாக கூறிவிட்டார் என ரசிகர்கள் பேசிவருகின்றனர். மேலும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்காக லண்டனில் உள்ள லைகா நிறுவனர் சுபாஸ்கரனை சந்தித்தாராம் விக்கி. அப்போதும் பாசிட்டிவான ரிசல்ட் கிடைக்கவில்லை என்பதால் தான் டிவிட்டர் கவர் போட்டோவை மாற்றிவிட்டு, லண்டனில் இருந்து ரிட்டர்னாகியுள்ளார் விக்கி.

மகிழ் திருமேனி பயணம்
விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கு திருப்தி இல்லையென்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி, அஜித்துக்காக மாஸ்ஸான கதையை ரெடி செய்துள்ளாராம். தற்போது இந்த கதையின் முழுமையான ஸ்கிரிப்ட்டுடன் லண்டன் சென்றுள்ளாராம் மகிழ் திருமேனி. அங்கு சுபாஸ்கரனை சந்தித்து ஏகே 62 கதையை சொன்ன பிறகு அபிஸியல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

விரைவில் ஏகே 62 ஷூட்டிங்
ஏகே 62 படத்துக்காக ரூ.220 கோடி பட்ஜெட்டை லைகா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாம். இதில் அஜித்துக்கு மட்டும் 105 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதேபோல் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் சம்பளம் இரண்டு மடங்காக வழங்கப்படவுள்ளதாம். ஏகே 62 படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே சொல்லப்படுகிறது. விரைவில் அஜித்துடன் நடிக்கும் நடிகைகள் குறித்த அப்டேட்டும், ஷூட்டிங் பற்றியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாறுமாறாக எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











