twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுரையில் மகிழ்மதி, பாகுபலி, கட்டப்பா, தேவசேனா: பார்க்க படையெடுக்கும் மக்கள்

    By Siva
    |

    மதுரை: மதுரையில் மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தை பார்க்க மக்கள் படையெடுக்கிறார்கள்.

    ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் வந்த மகிழ்மதி சாம்ராஜ்ஜியம் அனைத்து மாநில மக்களையும் கவர்ந்தது. இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் மகிழ்மதி சாம்ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டது.

    அதாவது மகிழ்மதி போன்று செட் போட்டுள்ளனர்.

    தமுக்கம்

    தமுக்கம்

    கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் கண்காட்சி, பொருட்காட்சி நடந்து வருகிறது. மகிழ்மதி அரண்மனை போன்று நுழைவு வாயில் அமைத்துள்ளனர்.

    கப்பல்

    கப்பல்

    பாகுபலி படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஓர் ஊரில் பாடலில் வரும் கப்பல் போன்றும் ஒன்றை செய்து வைத்துள்ளனர்.

    கூட்டம்

    கூட்டம்

    மகிழ்மதி நுழைவாயில், சிலைகள் மற்றும் கப்பல் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க பெரும் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வித்தியாசமான செட்டால் கூட்டம் கூடுவது பொருட்காட்சிக்கு லாபமாகியுள்ளது.

    லாபம்

    லாபம்

    மகிழ்மதி செட், பாகுபலி கதாபாத்திரங்களின் சிலைகளை பார்க்க வரும் மக்கள் பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்குகிறார்கள், மேலும் அங்கு விற்கப்படும் உணவுப்பொருட்களை வாங்கி உண்டு மகிழ்கிறார்கள்.

    English summary
    An exhibition cum sale is going on in Thamukam ground in Madurai. The organisers have kept a set of Magizhmathi palace, statues of main characters of the movie Baahubali and a ship that was part of a song.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X