மாப்ள.. உங்க அழகுமணி வந்திருக்கு நிமிர்ந்து பாருங்க.. அந்த அழகுமணி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை: சத்யராஜ் நடித்த மகுடம் படத்தில் செந்தில், கவுண்டமணி நகைச்சுவை பரவலாக பேசப்பட்டது. இந்த படத்தில் அழகுமணி காமெடியில் வரும் அழகுமணி நடிகை இப்போது எப்படி இருக்கிறார் என்று பார்க்கலாமா.

நக்கல், நையாண்டி என தனக்கே உரிய ஒரு பாடி லாங்குவேஜ் வைத்து இருக்கிறார் கவுண்டமணி. இவர் திரையில் வந்து பெரிதாக காமெடி பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை திரையில் வந்து நின்னாலே அதை பார்த்து சிரிப்பதற்கு என்றே இன்றும் ஒரு ரசிகர் கூட்டம் இவருக்கு பின்னால் இருக்கிறது. தமிழ் சினிமாவை தன்னுடைய காமெடியால் ஆட்சி செய்தவர் கவுண்டமணி. சூப்பர் ஸ்டார் தொடங்கி கமல், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, அஜித், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நண்பனாக இணைந்து காமெடியில் நடித்திருப்பார் கவுண்டமணி.

Magudam movie alagumani comedy actress latest photos trending on social media

இதுவும் குறிப்பாக கவுண்டமணி செந்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்றால் அந்த திரைப்படத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது என்பதால், தயாரிப்பாளர்கள் இருவரையும் தேடி தேடிச் சென்று ஒப்பந்தம் செய்தனர். இவர்கள் இருவரின் காம்பினேஷனில் வைதேகி காத்திருந்தாள், நம்ம ஊரு பூவாத்தா, கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர், நாட்டாமை என இன்னும் பல படங்களை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வசூலை அள்ளியது.

Magudam movie alagumani comedy actress latest photos trending on social media

செந்தில் கவுண்மணி காமெடி: இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடி மற்றும் சொப்பனசுந்தரி காமெடி காலங்கள் கடந்தும் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. சொப்பனசுந்தரி பெயரில் பாட்டு, காமெடி நிகழ்ச்சி என இன்றும் டிரெண்டிங்கில் உள்ளது. அதே போல நாட்டாமை படத்தில் செந்தில் பேசும் 'மை சன்' வசனத்தை அடித்துக்கொள்ளவே முடியாது. அப்படி ஒரு அட்ராசிட்டி செய்து இருப்பார் கவுண்டமணி. திரையில் இவர்கள் எலியும் பூனையுமாக அடித்துக்கொண்டாலும், நிஜத்தில் இவர்கள் இருவரும் இணை பிரியா நண்பர்களாகவே இருந்துள்ளனர்.

Magudam movie alagumani comedy actress latest photos trending on social media

மகுடம் திரைப்படத்தில்: இவர்கள் இருவரும் சேர்ந்த 1992ம் ஆண்டு வெளியான மகுடம் படத்தில் நடித்திருந்தனர். அப்படத்தை பிரதாப் போத்தன் எழுதி இயக்கி இருந்தார். இப்படத்தில் சத்யராஜ், பானுப்ரியா, கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். செந்தில், கவுண்டமணி நகைச்சுவைக்காகவே இத்திரைப்படம் பல நாட்கள் தியேட்டரில் ஓடியது.

அழகு மணி காமெடி: இந்த படத்தில் கவுண்டமணி பேருந்தின் மேல் கூரையில் சென்று கொண்டு இருக்க, அப்போது வரும், செந்தில், என் பெயர் மானஸ்தன், என் தங்கை அழகு மணிக்கு கோட்டையூர் ஜமீன்ல மாப்பிள்ளை பார்த்துவிட்டு வந்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்ல, டேய் உன் தங்கச்சி அவ்வளவு அழகா என்று கவுண்டமணி கேட்க. ஆமாம் என்று ஸ்ரீ தேவி போட்டோவை எடுத்து நீட்டுவார் செந்தில், போட்டோவை பார்த்து மயங்கிப்போன கவுண்டமணி நானே உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்பார்.

ஐய்யோ... அம்மா.. :உடனே செந்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய கவுண்டமணி ஸ்ரீதேவி போட்டோவை கையில் வைத்துக்கொண்டு செல்லா என்ற திரும்ப... ஐய்யோ என்று அலறுவார். இந்த காட்சியை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. இந்த காமெடியில் அழகுமணியாக நடித்த அந்த நடிகையின் உண்மையான பெயர் அழகு மணி தானாம். ஆசிரியரான இவர் தற்போது வேலையை விட்டு, குடும்பத்தை கவனித்துக்கொண்டு இருக்கிறார். தற்போது, நடிகை அழகுமணியின் போட்டோ இணையத்தில் வெளியாகிஉள்ளது. அதில், அவர் செம ஸ்டைலாக, க்யூட்டாக இருக்கிறார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X