சிம்பு, ஹன்சிகாவின் தாறுமாறான ரொமான்ஸ்… புது போஸ்டருடன் வெளியான ‘மஹா‘ அப்டேட் !

சென்னை : மஹா திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

ஹன்சிகா கேட்டுக்கொண்டதற்காக சிம்பு 'மஹா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

மஹா' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

மஹா

மஹா

ஹன்சிகாவின் 50 வது திரைப்படமான மஹா 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திரைப்படமாகும். இதில் கௌரவ தோற்றத்தில் நடிக்க சிம்புவிடம் கேட்டபோது, ஹன்சிகாவுடனான பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். சிம்பு படத்திற்குள் நுழைந்ததும் அவரின் கதாபாத்திரம் அதிகம் வரும் படி கதை நீட்டிக்கப்பட்டது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. க்ரைம், த்ரில்லிங் திரைப்படமான இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

ஹன்சிகா கடைசியாக அதர்வாவுடன் 100 படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஹன்சிகாவுக்கு தற்போது கைவசம் எந்த திரைப்படங்களும் இல்லாததால் 105 மினிட்ஸ் மற்றும் மஹா திரைப்படங்கள் வெளியானால், அது நிச்சயம் ஹன்சிகாவுக்கு ஒரு திருப்புமுனை படங்களாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இசை

இப்படத்தை இயக்குனர் யூஆர்.ஜமீல் எழுதி இயக்கத்தில் ETCETERA என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் தயாரித்துள்ள மஹா திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

முதல் பாடல்

முதல் பாடல்

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலை படக்குழு, வரும் 4 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து செம்ம ரொமான்டிக் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு

மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றுள்ளது. இத்திரைப்படம் சிம்புவுக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த நேரத்தில் மஹா திரைப்படத்தை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று மஹா படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X