twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகா தீபத்தை தரிசித்த இளையராஜா.. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!

    |

    சென்னை: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தார் இசையமைப்பாளர் இளையராஜா.

    கார்த்திகை தீபத் திருவிழா தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழகமெங்கும் வீடுகளை விளக்குகளால் அலங்கரித்தும் பட்டாசு வெடித்தும் மக்கள் கார்த்திகை தீபத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    செம க்யூட்டா இருக்கீங்க.. அதுல்யா வெளியிட்ட அழகு போட்டோக்கள்.. சொக்கித் தவிக்கும் ரசிகர்கள்!செம க்யூட்டா இருக்கீங்க.. அதுல்யா வெளியிட்ட அழகு போட்டோக்கள்.. சொக்கித் தவிக்கும் ரசிகர்கள்!

    மகா தீபம்

    மகா தீபம்

    கார்த்திகை மாதம் என்றாலே தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த மாதம். அக்னி ஸ்தலமாக இருக்கும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி வழிபடுவதை தொன்று தொட்டு செய்து வருகின்றனர். கொரோனா காலம் என்பதால், வெளி மாவட்ட மக்களுக்கு இம்முறை அனுமதி வழங்கப்படவில்லை.

    வீடுகளில் விளக்கேற்றி

    வீடுகளில் விளக்கேற்றி

    தமிழகமெங்கும் வீடுகளை மக்கள் விளக்குகளால் அலங்கரித்து கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடினர். இன்னொரு தீபாவளியாக பட்டாசுகளை வெடித்து, புத்தாடைகளை உடுத்தி ஒளிக் கடவுளை மக்கள் வணங்கி வருகின்றனர். திருவண்ணாமலை செல்ல முடியாத மக்கள் டிவியிலேயே நேரலையில் மகா தீபத்தை கண்டு வழிபட்டனர்.

    திருவண்ணாமலையில் இளையராஜா

    திருவண்ணாமலையில் இளையராஜா

    மகா தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை சென்ற இசையமைப்பாளர் இளையராஜா மகா தீபத்தையும் அண்ணாமலையாரையும் தரிசித்துள்ளார். இளையராஜா திருவண்ணாமலையில் சாமி தரிசனம் மேற்கொண்ட நிலையில், அவரது புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

    பக்தி அதிகம்

    பக்தி அதிகம்

    இளையராஜாவுக்கு இறை நம்பிக்கையில் அதிக ஈடுபாடு உண்டு. ஏகப்பட்ட கடவுள் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். அக்னி லிங்கம் என திருவண்ணாமலைக்கு ஸ்பெஷல் ஆல்பமே போட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்த போதும் திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Karthigai Maha Deepam celebrated today. Maestro Ilayaraja spotted in Thiruvannamalai after lend his prayer in temple.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X