ஹன்சிகா போஸ்டருக்கு சாதி, மத சாயம் பூசாதீங்க ப்ளீஸ்: இயக்குனர் வேண்டுகோள்
Recommended Video

சென்னை: மஹா பட போஸ்டரில் ஹன்சிகா தம்மடிப்பது போன்ற போஸ் குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் ஜமீல்.
ஹீரோவை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் பெண்ணாகவே இத்தனை ஆண்டுகளாக நடித்தார் ஹன்சிகா. இந்நிலையில் தான் மஹா படத்தில் அவர் வித்தியாசமாக நடிக்கிறார்.
ஜமீல் இயக்கி வரும் மஹா ஹன்சிகாவின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம்
மஹா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா காவி உடை அணிந்து தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் ஜமீலின் மதத்தை வம்புக்கு இழுத்து விமர்சித்தனர். இதை பார்த்த ஜமீல் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
ஜமீல்
உங்களின் கமெண்டுகளை பார்த்தேன். ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கமே தவிர சாதி அல்லது மதம் தொடர்பாக யார் மனதையும் காயப்படுத்த நினைக்கவில்லை. நான் இந்து- முஸ்லீம் என்பதை விட மனிதம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். தயவு செய்து சாதி, மத கோணத்தை உருவாக்க வேண்டாம் என்று ஜமீல் கேட்டுக் கொண்டுள்ளார்.
ட்விட்டர்
ஜமீலின் ட்வீட்டை பார்த்துவிட்டு இப்படி வில்லங்கமாக பதில் போட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
காவி
ஹன்சிகா காவி அணிந்து தம்மடித்தது தான் மக்களுக்கு பெரிய விஷயமாக தெரிகிறது. அதனால் தான் சாதி, மத சாயம் பூசி பிரச்சனையை கிளப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











