Monalisa: குமுறி அழும் கும்பமேளா மோனாலிசா.. ஒரே கண்ணீர்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த இயக்குநரா?

மும்பை: சில மாதங்களுக்கு முன்னர் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்றுக் கொண்டு இருந்தவர் ஏழைப்பெண் மோனாலிசா போஸ்லே. இளம் பெண்ணான இவரது கண்கள் பலரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டிருந்ததால் கும்பமேளாவிற்கு வந்தவர்களில் கணிசமானோர் இவரைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்கள். பலர் அவரை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதனால் மோனாலிசா பிரபலமடைந்தார்.

அவரைப் பார்க்கவே சிலர் கிளம்பி கும்பமேளாவுக்கு சென்றார்கள். இப்படியான நிலையில் அவர் மேலும் பிரபலமடைந்தார். இவருடன் செல்பி எடுக்க பலரும் போட்டி போட்டார்கள். மோனாலிசாவின் தோற்றத்திற்கு மக்கள் மத்தியில் இந்த அளவுக்கு வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் நினைக்கவில்லை. இப்படியான நிலையில் இவர் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனதால், இவரை சினிமாவில் நடிக்க வைக்க முன் வந்தார் இயக்குநர், சனோஜ் மிஸ்ரா முன் வந்தார்.

சனோஜ் மிஸ்ரா இதுவரை 10 படங்களை இயக்கியுள்ளார். இதில் 9 படங்கள் வெளியாகிவிட்டது. 10 வது படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில்தான் இந்திய அளவில் மோனலிசா ட்ரெண்ட் ஆக, அவரைத் தனது படத்தின் கதாநாயகியாக நடிக்க வைக்கிறேன் என அவரது வீட்டிற்கே சென்று அவரது குடும்பத்தினரிடம் பேசினார். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதால், இதனை தவறவிடக்கூடாது, சினிமாவில் நடிப்பதன் மூலம் தனது குடும்பத்தின் வறுமை நீங்கும் என முடிவெடுத்த, மோனாலிசா, இயக்குநர் சனோஜ் மிஸ்ராவின் அழைப்பை ஏற்றார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள், வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்துமே வெளியாகி டிரெண்ட் ஆனது.

Maha Kumbh Mela Monalisa Bhosle Breaks Down In Tears After Sanoj Mishra s Arrest Due To Rape Case

மோனலிசா: பலரும் மோனாலிசாவைப் பார்த்து பொறாமைப்பாட்டார்கள். கேரளாவில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் மோனாலிசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இப்படியான நிலையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தான் எங்கு சென்றாலும், மோனாலிசாவை அழைத்துச் சென்று, தான் சந்திக்கும் மனிதர்களை அறிமுகம் செய்து வைத்து வந்துள்ளார். இப்படியான நிலையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ராவை காவல்துறையினர், பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்துள்ளார்கள்.

பாலியல் வன்கொடுமை: அதாவது, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் சமூக வலைதளத்தில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்துள்ளார். அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை தனது பிரபலத்துவத்தை பயன்படுத்தி வாங்கிய இயக்குநர், அவரை போன் செய்து மிரட்டி வரவழைத்துள்ளார். இது மட்டும் இல்லாமல், அவரை வரவழைத்து, தனியார் ரிசார்ட்க்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வாடிக்கையாகவும் கொண்டுள்ளார். இதனால் அந்த பெண் 3 முறை கருகலைப்பு செய்துள்ளார். அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார்.

Maha Kumbh Mela Monalisa Bhosle Breaks Down In Tears After Sanoj Mishra s Arrest Due To Rape Case

கண்ணீர்: இப்போது கும்பமேளா மோனாலிசாவை நடிகை ஆக்குகிறேன் என அவருடன் சுற்றிக் கொண்டு இருந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் அளித்த புகாரில் சனோஜ் மிஸ்ராவை கைது செய்துள்ளது உத்தரபிரதேச காவல்துறை. சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டதால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார் மோனாலிசா. கண்ணீர் சிந்த வீட்டுக்கு வந்தவரை அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வரவேற்கிறார்கள். ஆனால் மோனாலிசா தொடர்ந்து அழுது கொண்டு உள்ளார். இந்திய அளவில் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. சிலர் நல்ல வேளை மோனலிசா தப்பித்தார் என பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X