Monalisa: கும்பமேளா மோனாலிசாவுக்கு கிடைத்த லட்டு ஹீரோ.. படத்தோட ஷூட்டிங் பூஜை போட்டு ஆரம்பிச்சிட்டாங்களே!
மும்பை: சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்றுக் கொண்டு இருந்த இளம்பெண் மோனாலிசா போஸ்லே. இளம் பெண்ணான அவரது கண்கள் பலரையும் வசீகரிக்கும் வகையில் இருந்ததால் கும்பமேளாவிற்கு வந்தவர்களில் கணிசமானோர் இவரைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்கள். பலர் அவரை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியதால் அவரைப் பார்க்கவே பலரும் கும்பமேளாவுக்கு படையெடுத்தனர். இதனால் மோனாலிசா பிரபலமடைந்தார்.
ஏற்கனவே கூறியதைப் அவரைப் பார்க்கவே சிலர் கிளம்பி கும்பமேளாவுக்கு சென்றார்கள். இதனால் மோனாலிசா மேலும் பிரபலமடைந்தார். இவருடன் செல்பி எடுக்க பலரும் போட்டி போட்டார்கள். பலர் அவருடன் வீடியோக்கள் குறிப்பாக ரிலீஸ் செய்து வீடியோக்களை வெளியிட்டார்கள். மோனாலிசாவின் தோற்றத்திற்கு மக்கள் மத்தியில் இந்த அளவுக்கு வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் யோசித்து கூட பார்க்கவில்லை. இது மட்டும் இல்லாமல், மோனாலிசாவைப் பார்க்க பலரும் திரண்டதால் அவர்களின் வியாபாரம் பாதிப்படைந்தது. இப்படியான நிலையில் இவர் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனதால், இவரை சினிமாவில் நடிக்க வைக்க முன் வந்தார் இயக்குநர், சனோஜ் மிஸ்ரா.
மோனாலிசாவை கதாநாயகி ஆக்குகிறேன் என்று கூறிய சனோஜ் மிஸ்ரா இதுவரை 10 படங்களை இயக்கியுள்ளார். இதில் 9 படங்கள் வெளியாகிவிட்டது. 10 வது படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில்தான் இந்திய அளவில் மோனலிசா ட்ரெண்ட் ஆக, அவரைத் தனது படத்தின் கதாநாயகியாக நடிக்க வைக்கிறேன் என அவரது வீட்டிற்கு சென்றார் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா.

சினிமா வாய்ப்பு: எளிமையான குடும்பத்திற்கு சிந்தனையிலேயே இல்லாத சினிமா வாய்ப்பு வரும்போது முதலில் தயங்கினர். ஆனால், புத்திசாலித்தனமாக யோசித்த மோனாலிசா, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதால், இதனை தவறவிடக்கூடாது, சினிமாவில் நடிப்பதன் மூலம் தனது குடும்பத்தின் வறுமை நீங்கும் என முடிவெடுத்தார். இதனால், இயக்குநர் சனோஜ் மிஸ்ராவின் அழைப்பை ஏற்றார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள், வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்துமே வெளியாகி இணையத்தில் வேகமாக பரவியது.
பொறாமை: கும்பமேளா விழாவில் பாசிகள் விற்றுக் கொண்டு இருந்த மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பா என்று பலரும் மோனாலிசாவைப் பார்த்து பொறாமைப்பாட்டார்கள். கேரளாவில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் மோனாலிசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இயக்குநர் சனோஜ் மிஸ்ராவின் அறிமுகம் கிடைத்த பின்னர், இயக்குநர் சனோஜ் மிஸ்ராவுடன் பல இடங்களுக்கு பயணம் செய்தார், இப்படியான நிலையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ராவை சில மாதங்களுக்கு காவல்துறையினர், பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்தனர். இதனால் இவரது சினிமா கனவு ஆரம்பிக்கும் முன்னரே சிதைந்தது என்று பலரும் கூறினார்கள்.

புது வீடியோ: ஆனால் மோனாலிசா, பிரபலம் அடைந்த பின்னர், தனது தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்துள்ளது. இப்படியான நிலையில் இவர் தற்போது படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் போல தெரிகிறது. இது தொடர்பான பூஜை வீடியோவைப் பகிர்ந்துள்ளார் மோனாலிசா. இதனைப் பார்த்த இணையவாசிகள், மோனாலிசாவுக்கு லட்டு மாதிரி ஒரு கதாநாயகன் கிடைத்து விட்டாரே என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள். அதே நேரத்தில் அது ஆல்பம் பாடலின் வீடியோவாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











