சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி நடிக்கும் 'மஹா சமுத்திரம்' ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!
சென்னை: சர்வானந்த், சித்தார்த் நடிக்கும் மஹா சமுத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் கார்த்திகேயா, பாயல் ராஜ்புத் நடித்து ஹிட்டான படம் 'ஆர்.எக்ஸ்.100'.
இதன் இயக்குநர் அஜய் பூபதி இயக்கும் படம், மஹா சமுத்திரம். இதில் சர்வானந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

அதிதி ராவ் ஹைதாரி
இன்னொரு ஹீரோவாக சித்தார்த் நடிக்கிறார். 2013-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஜபர்தஸ்த்' படத்துக்குப் பிறகு சித்தார்த் நடிக்கும் நேரடி தெலுங்குப் படம் இது. இதில் ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார். இந்தப் படத்தை ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

காதல், ஆக்ஷன்
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் காதல் கலந்த ஆக்ஷன் கதையாக உருவாகிறது. இதில் அதிதி ராவ் கேரக்டர் நெகட்டிவ் ஷேட் கொண்டது என்று கூறப்படுகிறது. கிட்டதட்ட வில்லி கேரக்டர்தான் என்று கூறுகிறார்கள். ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை.

அனு இம்மானுவேல்
மற்றொரு ஹீரோயினாக, அனு இம்மானுவேல் நடிக்கிறார். விசாகப்பட்டினம் பின்னணியில் இந்தப் படம் உருவாகிறது. கொரோனா பரவலுக்கு முன், இந்தப் படத்தில் ஒரு ஹீரோயினாக சமந்தாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். பிறகு அவர் திடீரென விலகினார். அவருடைய முன்னாள் காதலர் சித்தார்த் நடிப்பதால்தான் விலகினார் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது.
Recommended Video

ரிலீஸ் தேதி
இதையடுத்தே அதிதி ராவ் இந்தப் படத்தில் ஒப்பந்தமானார். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











