மிரளவைக்கும் “மஹா“ டீசர்…. மூன்றே நாளில் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை !
சென்னை : சிம்பு , ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகி உள்ள மஹா படத்தின் டீசர் வெளியான 3 நாளில் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார.
ஹான்சிகா மோத்வானி, சிம்பு, ஸ்ரீகாந்த்,கருணாகரன், தம்பிராமையா, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

50வது படம்
ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாபாத்திரத்தில் இப்படத்தில் கலக்கி உள்ளார். இப்படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படமாகும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே இப்படத்தின் மீதான எதிர்ப்பு பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரொமான்டிக் பாடல்
மஹா திரைப்படத்தில் சிம்பு முதலில் கௌரவ தோற்றத்திற்காகவே அழைக்கப்பட்டார். சிம்புக்கு இப்படத்தில் இருந்த ஈடுபாட்டைத் தொடர்ந்து அவர் வரும் காட்சிகள் நீட்டிக்கப்பட்டன. மேலும் ஒரு ரொமான்டிக் பாடலும் அவருக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து இப்படம் சிம்பு நடிக்கும் படமாகவே மாறியுள்ளது.

மிரள வைக்கிறது
இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. டீசர் ஆரம்பிக்கும் போதே மொத்த தமிழ்நாட்டு போலீஸ் கண்ணுலையும் ஒருத்தன் விரலைவிட்டு ஆட்டுறான் என்று ஆக்ரோஷமான குரலில் டீசர் ஆரம்பித்து விறுவிறுப்பாகிறது. க்ரைம், த்ரில்லிங், ஆக்ஷன் என டீசர் மிரள வைக்கிறது.

1மில்லியன் பார்வையாளர்கள்
டீசர் வெளியான 3 நாளில் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாதனை படைத்துள்ளது. டீஸருக்கு கிடைத்து வரும் பெரும் வரவேற்பில் "மஹா" படக்குழு உற்சாகத்தில் திளைத்து வருகிறது. விரைவில் படத்தின் ட்ரெயலர், இசை வெளியீடு மற்றும் உலகளவிலான திரை வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











