சிம்பு,ஹன்சிகாவின் மஹா... சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
சென்னை : சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவான மஹா திரைப்படத்தின் டீசர் ஜூலை 2ந் தேதி வெளியாக உள்ளது.
கதாநாயகியை மையமாக வைத்து உருவாகி உள்ள, இப்படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படமாகும்.
உபைத் ரஹ்மான் ஜமீல் எழுதி இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சிம்பு, ஹன்சிகா
சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் மஹா. இதில் கௌரவ தோற்றத்தில் நடிக்க சிம்புவிடம் கேட்டபோது, ஹன்சிகாவின் பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
சிம்பு படத்திற்குள் நுழைந்ததும் அவரின் கதாபாத்திரம் அதிகம் வரும் படி கதை நீட்டிக்கப்பட்டது. இப்படத்தில் சிம்பு ஒரு பாடலிலும் நடித்துள்ளார். இந்த பாடல் காட்சி கோவாவில் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

பிரச்சனை சுமூகமானது
இப்படத்தின் இயக்குனர் உபைத் ரஹ்மான் ஜமீல், தனது கதையை வைத்து, தனக்கு தெரியாமல் படத்தை முடித்து ஓடிடியில் படத்தை வெளியிட முயற்சிப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த பஞ்சாயத்தில் இயக்குனர் சங்கம் தலையிட்டு பிரச்சினையை முடித்து வைத்தனர்.

டீசர் ரிலீஸ்
இந்நிலையில் இப்படத்தின் டீசர் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. வருகிற ஜூலை 2 ந் தேதி மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என்று தெரிகிறது. இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் எழுதி இயக்கி உள்ளார். மதியழகன் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான்இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஹன்சிகா மோத்வானியின் 50-வது திரைப்படமாகும்.


Click it and Unblock the Notifications











