சிம்பு ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ஹன்சிகாவின் ‘மஹா’ ரிலீஸ் தேதி இதுதான்!
சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள மஹா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள மஹா என்ற படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார்.
'ரோமியோ ஜூலியட்' படத்தின் இயக்குநர் லக்ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய யு.ஆர்.ஜமீல் இப்படத்தை இயக்கி உள்ளார்.

மஹா
நாயகியை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ஹன்சிகா லீட் ரோலில் நடத்துள்ளார். இது ஹன்சிகாவின் 50வது திரைப்படமாகும். இதில், ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு பல பிரச்சனைகளால் படம் வெளியாகவில்லை.

சிறப்பு தோற்றத்தில் சிம்பு
இப்படத்தில் சிம்புவிடம் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கேட்டபோது ஹன்சிகாவுடனாக மோதலை மறந்து சிம்பு நடிக்க சம்பதித்தார். மேலும், இப்படத்தின் மீது அவர் காட்டிய ஆர்வத்தால், அவருக்காக மஹா படத்தில் தனியாக ஒரு பாடல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

மஹா படத்தின் கதை
விமானப் பெண்ணாக இருக்கும் ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. குழந்தையை கொன்றது யார் என்பதை கதாநாயகி ஹன்சிகா கண்டுபிடிப்பது தான் கதை. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Recommended Video

மஹா ரிலீஸ் தேதி அறிவிப்பு
மஹா திரைப்படம் கடந்த ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, வருகிற ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மஹா திரைப்படத்தை அடுத்து ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ் திரைப்படமும், மை நேம் இஸ் ஸ்ருதி, பார்ட்னர் ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications











