சர்ச்சையை ஏற்படுத்திய ஹன்சிகாவின் 'மஹா'.... படக்குழுவுக்கு தயாரிப்பாளர் பாராட்டு!
ஹன்சிகா நடிக்கும் மஹா திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
சென்னை: ஹன்சிகா நடிக்கும் மஹா திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் உள்ளார்.
ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் படம் 'மஹா'. ஹன்சிகாவுக்கு இது 50வது படம் என்பதால், கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல்பார்வை போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியது. சாமியார் உடையில் புகைப்பிடிக்கும் ஹன்சிகாவின் போஸ்டரை நீக்க வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்திருக்கிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் மதியழகன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
"ஒரு தயாரிப்பாளராக மிகக் கடுமையாக பணிபுரியும் இந்த குழுவை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். ஒரு தயாரிப்பாளரை ஊக்கப்படுத்தும் முதல் விஷயம், படக்குழுவினர் சொன்ன தேதிக்குள் முடித்துக் கொடுக்கும் போது தான். இயக்குனர் ஜமீல், ஹன்சிகா மோத்வானி, ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் மற்றும் குழுவில் உள்ள அனைவரின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்கிறார் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி மதியழகன்.
நயன்தாராவின் கொலையுதிர் காலம், அருண் விஜய் நடிக்கும் 'பாக்ஸர்' உள்ளிட்ட படங்களை தயாரித்து வருபவர் மதியழகன்.


Click it and Unblock the Notifications











