என்ன அழகான கெமிஸ்ட்ரி... இந்த சீன்களையா நீக்கினாங்க... மகான் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு
சென்னை : நடிகர் சியான் விக்ரம், த்ருவ் விக்ரம், சிம்ரன், சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது மகான் படம்.
இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான நிலையில், ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினர்.
படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தனர்.

மகான் படம்
நடிகர் சியான் விக்ரம், த்ருவ் விக்ரம், சிம்ரன், சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளியானது மகான். இந்தப் படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காந்திய வழியில் நடக்கும் ஒரு நபர் மற்றும் ஒருநாளில் அவர் செய்யும் சில செயல்கள் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை கதைக்களமாக இந்தப் படம் கொண்டிருந்தது.

கொண்டாடிய ரசிகர்கள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினர். கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படமான ஜகமே தந்திரம் அவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

கேங்ஸ்டர் கதைக்களம்
இந்தப் படத்திலும் கார்த்திக் சுப்புராஜ் கேங்ஸ்டர் கதைக்களத்தையே கையில் எடுத்திருந்தார். பீட்சா போன்ற ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து கேங்ஸ்டர் கதைக்களத்திலேயே படங்களை இயக்கி வருகிறார். ஆனால் மகான் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

வாணி போஜன் காட்சிகள் நீக்கம்
படத்தில் விக்ரம் மட்டுமின்றி, சிம்ஹா, த்ருவ் விக்ரம் உள்ளிட்ட ஒவ்வொரு கேரக்டரும் தங்களது கேரக்டர்களை சிறப்பாக செய்திருந்தனர். இந்தப் படத்தில் வாணி போஜன் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளதாக ரிலீசுக்கு முன்பு கூறப்பட்ட நிலையில் படம் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

100வது நாள் கொண்டாட்டம்
ஒரு காட்சியில்கூட வாணி போஜன் படத்தில் இல்லாததே இதற்கு காரணம். அவர் படத்தில் நடித்திருந்தாரா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் படத்தில் நடித்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தை இன்றைய தினம் படக்குழு கொண்டாடி வருகிறது.

நீக்கப்பட்ட காட்சிகள் ரிலீஸ்
இதையொட்டி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார். நீக்கப்பட்ட தனிமை, நீக்கப்பட்ட சாபம் மற்றும் நீக்கப்பட்ட பந்தம் என்ற தலைப்புகளில் மூன்று வீடியோக்களை இந்த பதிவில் அவர் வெளியிட்டுள்ளார்.

விக்ரம் -வாணி போஜன் கெமிஸ்ட்ரி
இதில் நீக்கப்பட்ட தனிமை வீடியோவில் வாணி போஜன் இடம்பெற்றுள்ள காட்சிகள் காணப்படுகின்றன. 7 நிமிடங்களுக்கு மேல் இந்த வீடியோ காணப்படுகிறது. இதில் விக்ரம் மற்றும் வாணி போஜனின் கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. இந்தக் காட்சிகளையா நீக்கினார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

கெட்ட வார்த்தை பேசும் வாணி போஜன்
மேலும் இந்த வீடியோவில் வாணி போஜன் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். போகிற போக்கில் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார். விக்ரமுடன் நெருக்கம் காட்டுகிறார். திருமணம் வேண்டாம் என்று அவரிடம் சண்டை போடுகிறார். முன்னதாக திருமணம் வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த வீடியோ சிறப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











