மகான் பக்கா மாஸ்... சமூக வலைதளங்களில் கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்

திரை அரங்குகளில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இப்போது நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

 ஆதித்ய வர்மா

ஆதித்ய வர்மா

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டு உள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் இப்பொழுது படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெடி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆதித்ய வர்மா முதலில் வர்மா என்ற பெயரில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் பைனல் அவுட் தயாரிப்பு குழுவுக்கு பிடிக்கவில்லை என தெலுங்கில் வந்தது போலவே அப்படியே வேண்டும் என கேட்டுக் கொண்டதால் படத்தை மீண்டும் முதலில் இருந்து எடுத்தது தெலுங்கில் எப்படி வெளியானதோ அதேபோல அதே காட்சிகள் அதிகம் வசனங்கள் என அச்சுப்பிசகாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிடா சந்து நடித்திருப்பார்.

 தடைகளை தாண்டி

தடைகளை தாண்டி

இருவருக்கும் முதல் படம் என்ற எந்த ஒரு சாயலும் தெரியாத அளவிற்கு மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று இருப்பார்கள். துருவ் விக்ரம் தமிழில் ஹீரோவாக அறிமுகமான முதல் படமே பல தடைகளை தாண்டி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது

 நெகட்டிவ் ரோலில்

நெகட்டிவ் ரோலில்

ஆதித்ய வர்மா கொடுத்த மிகப்பெரிய நம்பிக்கையை தொடர்ந்து இப்பொழுது தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்தில் துருவ் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் திரைப்படங்கள் என்றாலே தனி கேங்ஸ்டர் படங்களாக இருக்கும். அதே ஃபார்முலாவில் இப்பொழுது மகான் திரைப்படமும் உருவாகி உள்ளது. இதுவரை படங்களில் ஹீரோவாக வலம் வந்த விக்ரம் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் கேங்ஸ்டர் டானாக நடித்துள்ளார். நீண்ட தலைமுடி, சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் என முற்றிலும் வில்லத்தனத்தை காட்டி புதுவிதமான பரிமாணத்தை விக்ரம் இந்த படத்தில் கொடுத்துள்ளார்.

நிஜ வாழ்க்கையில் தந்தை மகனாக உள்ள விக்ரம் மற்றும் துருவ் மகான் படத்திலும் தந்தை மகனாக நடித்துள்ளனர். மகாத்மா காந்தியின் வழியில் நேர் வழியில் வாழ நினைக்கும் சாதாரண ஆசிரியராக உள்ள ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எப்படி சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு கேங்ஸ்டார் டானாக மாறுகிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை மிகவும் சுவாரசியமாக கூறியுள்ள மகான் திரைப்படத்தில் இருவரின் நடிப்பும் அபாரமாக உள்ளது.

 இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்

இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இப்படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி இப்பொழுது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X