மனைவி மீது புகார்.. மகாபாரத நடிகருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
சென்னை: பிஆர் சோப்ராவின் ஹிட் தொலைக்காட்சித் தொடரான மகாபாரதத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடித்து பிரபலமானவர் தான் நிதிஷ் பரத்வாஜ். இவர் தனது மனைவி தன்னை, மனரீதியாக துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல நடிகரான நிதிஷ் பரத்வாஜ், மகாபாரதம் மட்டுமில்லாமல், விஷ்ணு புராணம், மொஹஞ்சதாரோ, கேதார்நாத் மற்றும் சமந்தர் போன்ற பிற புகழ் பெற்ற தொடர்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர், மனித உரிமைகள் ஆணையம் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் தனது மனைவி ஸ்மிதா கேட் குறித்து போபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மனைவி ஸ்மிதா தனது இரட்டை மகள்களான தேவயானி மற்றும் ஷிவரஞ்சனியை சந்திக்க விடவில்லை என்று குற்றம் சாட்டினார்.

தனது மனைவி தங்கள் மகள்களைப் பார்ப்பதைத் தடுக்க அவர்களின் பள்ளிகளை மாற்றுவதாகக் கூறப்படுகிறது, இது அவரது மன ஆரோக்கியத்தை நிச்சயம் பாதிக்கும். இந்த விவகாரத்தில் காவல் துறையினர் தலையிட்டு, தனது மகள்களை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.. இந்த புகாரை விசாரித்த அதிகாரி பல்குனி தீட்சித், உங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. நீங்கள் இருவரும் பரிந்து வாழ்கிறீர்கள் இது சில நேரம் மரணத்தை விட வேதனையாக இருக்கும். ஒரு குடும்பம் சிதைந்தால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். எனவே, தங்கள் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் பொறுப்புடன் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்.

நடிகர் நிதிஷ் பரத்வாஜ் மற்றும் மனைவி ஸ்மிதா இருவரும் 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு செப்டம்பர் 2019ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.. ஸ்மிதாவும் அவர்களது இரண்டு மகள்களும் இந்தூரில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











