twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ.700 கோடியில் 5D டெக்னாலஜியில் தயாராகும் ’மாஹாபாரதம்’..அஜய், அக்‌ஷய், ரன்வீர் சிங் நடிக்கின்றனர்

    |

    மிகப்பெரிய காவியமான மஹாபாரதம் 5D டெக்னாலஜியில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான தயாரிப்பு செலவு ரூ.700 கோடி என திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தியில் தயாராகும் படத்தில் பாலிவுட் முன்னணி ஹீரோக்கள் அக்‌ஷய்குமார், ரன்வீர் சிங் அஜய்தேவ்கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    இப்படத்தை தயாரித்தவரின் தந்தை 1965 ஆம் ஆண்டு தயாரித்த மஹாபாரதம் இந்தியில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்தது வரலாறு.

    ஓடிடியில் ஷேர் ஆகும் கமலின் விக்ரம் படம்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் பத்தி பாக்கலாமா? ஓடிடியில் ஷேர் ஆகும் கமலின் விக்ரம் படம்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் பத்தி பாக்கலாமா?

    இந்திய மக்களால் பூஜிக்கப்படும் இதிகாசம் மஹாபாரதம்

    இந்திய மக்களால் பூஜிக்கப்படும் இதிகாசம் மஹாபாரதம்

    ராமாயணம், மஹாபாரதம் இரண்டு இதிகாசங்களுக்கும் இந்தியாவில் மொழி கடந்து அனைத்து மக்களும் படிக்க கூடிய ஒன்று. இதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள், டிவி தொடர்கள் பொதுமக்களின் வரவேற்பை பெற்றது. ராமாயணம், மஹாபாரதக்கதைகள் திரைப்படமாக இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் மஹாபாரதம் பெரும் கிளைக்கதைகளை கொண்ட ஒரு காவியம் ஆகும். மஹாபாரதம் தொலைக்காட்சி தொடர் இந்தியாவின் பல மொழிகளில் வெளியானது.

    5D தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் ‘மஹாபாரத்'

    5D தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் ‘மஹாபாரத்'

    பாலிவுட்டில் வெவ்வேறு விஷயங்களில் வரும் படங்கள் பார்வையாளர்களால் விரும்பப்படுகின்றன. 3டி படங்களும் பார்வையாளர்களால் ரசிக்கப்படுகின்றன. தற்போது 5டி டெக்னாலஜியில் திரைப்படங்கள் வர உள்ளன. இந்தியாவிலும் 5 டி தொழில்நுட்பத்துடன் ஒரு படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பெயர் மஹாபாரதம். படம் தயாரிப்பு குறித்த விவாதம் தற்போது நடந்து வருகிறது. ஃபிரோஸ் நதியாத்வாலா 5D படமான 'மஹாபாரத்' தை தயாரிக்கும் முனைப்பில் பணியாற்றி வருகிறார். ஃபிரோஸ் ஏற்கெனவே 'ஹெரா பெரி' மற்றும் 'வெல்கம்' ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்துள்ளார்.

    2025 ல் வெளியாகும் 'மஹாபாரதம்'

    2025 ல் வெளியாகும் 'மஹாபாரதம்'

    'மஹாபாரதம்' படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணியில் படக்குழு நான்கைந்து வருடங்களாக வேலை செய்து வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷனுக்கு தயாரிப்பாளர்கள் சில வருடங்கள் எடுத்துக் கொள்வார்கள். இப்படம் 2025 டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது. மஹாபாரதம் படத்தை 5D தொழில் நுட்பத்தில் பார்ப்பதற்காக இப்போதிருந்தே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    சும்மா இல்லை 700 கோடி ரூபாய் பட்ஜெட்

    சும்மா இல்லை 700 கோடி ரூபாய் பட்ஜெட்

    மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டாலும், இப்படம் மூன்று மணி நேரம் மட்டுமே ஓடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 'மஹாபாரதம்' படத்தின் பட்ஜெட் ரூ. 700 கோடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த வேறு எந்த தகவலையும் படக்குழுவினர் இதுவரை தெரிவிக்கவில்லை. இது இந்தியாவின் பலவேறு மொழிகளில் வெளியாகும் பான் இந்தியா படமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

    பாலிவுட்டின் பிரபல நட்சத்திர நடிகர்கள்

    பாலிவுட்டின் பிரபல நட்சத்திர நடிகர்கள்

    மகாபாரதத்தில் பிரபல பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், பரேஷ் ராவல், நானா படேகர், அனில் கபூர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது ஒருவேளை பான் இந்தியா படமாக உருவானால் மற்ற மொழியின் பிரபலங்களும் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. இது தவிர பிரபல நடிகைகளும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

    1965 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மஹாபாரதம் திரைப்படம்

    1965 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மஹாபாரதம் திரைப்படம்

    தற்போது 5D யில் மஹாபாரதத்தை தயாரிக்க உள்ள ஃபெரோஸ் நதியாத்வாலா சாதாரண நபரல்ல. ஏற்கெனவே அவரது தந்தை, அதாவது ஏஜி நதியாத்வாலா மஹாபாரதம் படத்தை தயாரித்தவர். இப்படம் 1965 இல் வெளியானது. இந்த படம் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இப்படத்தில் பிரதீப் குமார், பத்மினி மற்றும் தாரா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 2025 ஆம் ஆண்டு வர உள்ள புதிய மஹாபாரதத்தை 5D வடிவில் பார்க்க பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    English summary
    The epic Mahabharata is going to be made in 5D technology. The production cost for this is planned to be Rs.700 crores. The film is prepared in Hindi will also star Bollywood leading heroes Akshay Kumar, Ranveer Singh Ajaidevkhan and many others. Mahabharatham, produced by the father of this film in 1965, is a box office hit in Hindi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X