‘’காலா.. உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்’’ கமல் 234 போஸ்டரில் மறைந்திருக்கும் உண்மை!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள 234வது படத்தின் போஸ்டரில் பாரதியின் கவிதை வரிகள் இடம் பெற்றுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் கடந்த 1987ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த நாயகன் திரைப்படம் பல நாட்கள் தியேட்டரில் ஓடி, வசூலை அள்ளியது.

Mahakavi Subramaniya bharathi lines in kamal Haasan 234 movie poster

இந்திய சினிமாவில் டாப் படங்களின் லிஸ்டில் இந்தப் படம் இடம் பிடித்துள்ளது. அத்துடன் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படமாகவும் உள்ளது.

நாயகன்: மும்பையை தனது கைக்குள் வைத்துக்கொண்டு கலக்கி வந்த தமிழ் தாதாவான வரதராஜ முதலியார் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், கமல் வேலு நாயக்கராக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இளையராஜா இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி இன்றும் கிளாசிக் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

கமல் மணிரத்னம் கூட்டணி: இந்த படத்துக்கு பின்னர் நாயகன் வெற்றிக்கூட்டணி 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசனின் 234வது படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் பற்றி எந்த தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.

Mahakavi Subramaniya bharathi lines in kamal Haasan 234 movie poster

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: இந்நிலையில், கமல் ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு 234 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டரில் கமல்ஹாசன் கிழிந்த உடையில், கண்கள் மட்டுமே போஸ்டரில் தெரியும் படி முக்காடு போட்டுள்ளார். இந்த போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் இது விஸ்வரூபம் சாயலில் இருப்பதாக கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

பாரதியின் பாடல் வரி: அதுமட்டுமின்றி அந்த போஸ்டரில் பாரதியாரின் கவிதை ஒன்றும் மறைந்துள்ளது. காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்... வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல.. வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்... மூலா வென்று கதறிய யானையயைக் காக்கவே-நின்தன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ, கெட்ட மூடனே? என்ற பாடல் அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. இது தற்போது கமல் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X