டேய் புருஷா.. மவனே.. ரவீந்தரும் மகாவும்,கடைசியில அந்த சேமியா உப்புமாவால தான் பிரியப் போறாங்களா?

சென்னை: சின்னத்திரை நடிகை மகாலக்‌ஷ்மியும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும் பிரிந்து விட்டதாக சில யூடியூபர்கள் வதந்தி கிளப்பி உள்ள அது தொடர்பாக அவங்க போட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

லிப்ரா தயாரிப்பு நிறுவன தயாரிப்பாளர் ரவீந்தரை முன்னாள் விஜே மற்றும் சின்னத்திரை நடிகையான மகாலக்‌ஷ்மி காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை விட பெரியளவில் மீடியாக்களின் பார்வையை இந்த ஜோடியின் திருமணம் ஈர்த்ததாக ரவீந்தரே போஸ்ட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mahalakshmi and Ravinder will separate due to Semiya Upma?

ரவீந்தர் மகாலக்‌ஷ்மி திருமணம்:

லிப்ரா நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து சின்னத்திரை நடிகையான முன்னாள் சன் மியூசிக் விஜே மகாலக்‌ஷ்மி திருமணம் செய்துக் கொண்டார்.

ரவீந்தரின் உருவத்தை வைத்து இவங்க ரெண்டு பேரும் திருமணம் செய்துக் கொண்ட பின்னர் ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் சமூக வலைதளத்தில் பரவின. ஆனால், அதையெல்லாம் பெரிதாக கண்டுக் கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்கிற முனைப்பில் இருவரும் அடிக்கடி சோஷியல் மீடியாவில் வெளியே உணவருந்தும் போட்டோக்களையும், ஒன்றாக ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

விவாகரத்து வதந்தி:

சமீபத்தில் ரவீந்தர் தனியாக எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட உடனடியாக ஒரு சில யூடியூபர்கள் மகாவும் ரவீந்தரும் பிரிஞ்சிட்டாங்க,. இருவரும் விவாகரத்து செய்யப் போறாங்க என கொளுத்திப் போட்டுள்ளனர்.

இதனால், அப்செட்டான மகாலக்‌ஷ்மி தனது கணவரை திட்டிய வார்த்தைகளை அப்படியே எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவாக போட்டுள்ளார் ரவீந்தர்.

டேய் புருஷா:

டேய் புருஷா.. எத்தனை தடவை உன் கிட்ட சொல்றது தனியா எடுக்கிற போட்டோவை போடாதேன்னு, பாரு ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவும் நீயும் நானும் பிரிஞ்சிட்டோம்னு கதை கட்டி விடுறாங்க.. மவனே இனிமேல் தனியா இருக்குற போட்டோவை போட்டால் அவ்வளவு தான்.. எனக்கு பிடிச்ச சேமியா உப்புமாவை 3 வேலைக்கும் செஞ்சி போட்டுடுவேன் என மகாலக்‌ஷ்மி திட்டியதை அப்படியே எடுத்துப் போட்டு விட்டார் ரவீந்தர்.

மேலும், தன்னுடைய மைண்ட் வாய்ஸில்.. இன்னுமாடா நாங்க டிரெண்டு.. இதுக்கு இல்லையா ஒரு எண்டு என பதிவிட்டு கிசுகிசுக்களை சொல்றவங்களுக்கு எதிராக போஸ்ட் போடுறேன்னு மகா செய்யுற சுவையான சேமியா உப்புமா டார்ச்சர் தாங்கலைங்கிறதை மறைமுகமாக சுட்டிக் காட்டி உள்ளார்.

Mahalakshmi and Ravinder will separate due to Semiya Upma?

உப்புமாவால் கிளம்பிய சண்டை:

ரவீந்தர் மகாவுடன் ஜோடியாக எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை ஷேர் செய்து இப்படியொரு போஸ்ட் போட, அதை அமைதியாக பார்த்து படித்து விட்டு மகாலக்‌ஷ்மி எல்லாம் ஓகே.. ஏன் சேமியா உப்புமாவுக்கு என்ன குறைச்சல் என சண்டை பிடித்து விட்டார்.

அவரது கமெண்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் கடைசியில் சேமியா உப்புமாவால் இருவரும் பிரிஞ்சிடுவீங்க போல இருக்கே என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X