நினைவுகளுடன் இறக்க வேண்டும்..கனவுகளோடு அல்ல..என்ன ஆச்சி மகாலட்சுமிக்கு ஏன் இப்படி ஒரு கேப்ஷன்!

சென்னை : சீரியல் நடிகை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு கேப்ஷனை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் தனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் சுட்டக்கதை, நட்புன்னா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தற்போது இவரது தயாரிப்பில் விடியும் வரை காத்திரு படம் உருவாகி வருகிறது.

இவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருப்பதியில் திருமணம்

திருப்பதியில் திருமணம்

கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் காதும் காதும் வைத்தவாறு யாருக்கும் சொல்லாமல் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாயடைந்து போனார்கள். பணத்திற்காக நடைபெற்ற திருமணம் என்றும், மகாலட்சுமியை மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்தன.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இதையடுத்து, இருவரும் கொஞ்சம் கூட நொந்து கொள்ளாமல் வளைத்து பேட்டி கொடுத்தனர். இதில், நாங்கள் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் என்றார். நாங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டதில் யாருக்கு என்ன பிரச்சனை என்றனர்.

இணையத்தில் ஆக்டிவாக

இணையத்தில் ஆக்டிவாக

பல ஊடங்களுக்கு பேட்டி கொடுத்து களைத்துப்போன இந்த ஜோடி, இனி பேட்டி கொடுக்க மாட்டோம் என முடிவு செய்தனர். இருந்தாலும், ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து மனைவியுடன் இருக்கும் போட்டோ, மனைவிக்கு கார் பரிசளித்த போட்டோ, முத்தம் கொடுத்த போடோ எஎன அவ்வப்போது போட்டோவை பகிர்ந்து இன்ஸ்டாவை தெறிக்கவிட்டு வருகிறார்.

குழம்பிய ரசிகர்கள்

குழம்பிய ரசிகர்கள்

இந்நிலையில், மகாலட்சுமி தனது இன்ஸ்டாபக்கத்தில் புதிய சேலையை கட்டிக்கொண்டு தத்துவத்தை பகிர்ந்துள்ளார். அதில், நினைவுகளுடன் இறக்க வேண்டும்... கனவுகளோடு அல்ல என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த கேப்ஷனை பார்த்த ரசிகர்கள் மகாலட்சுமிக்கு என்ன ஆச்சு என்றும், ஏன் இப்படி ஒரு பதிவு என்றும் கேள்வி கேட்டுவருகின்றனர். மகாலட்சுமியின் இந்த புதிய லுக்ஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X