Don't Miss!
- News
உருட்டு கட்டையை எடுத்து ஒரே அடி.. ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி தலை சிதறி பலி! சென்னையில் ஷாக்
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
தல பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய மகாலட்சுமி – ரவீந்திரன் ஜோடி!
சென்னை : நடிகை மகாலட்சுமி, ரவீந்திரன் மகாலட்சுமி தம்பதி தங்களது தல பொங்கலை தடபுடலாக கொண்டாடி உள்ளனர்.
தயாரிப்பாளர் ரவீந்தரன் மற்றும் மகாலட்சுமிக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மிகவும் ரகசியமாக இவர்களது திருமணம் திருப்பதியில் நடந்தது. இன்ஸ்டாகிராமில் இவர்களின் திருமண புகைப்படத்தை பார்த்த பிறகே பலருக்கு இவர்களுடைய திருமண செய்தி தெரிந்தது.
வாழ்க்கை
மிகவும்
அழகானது..
கணவருடன்
புகைப்படம்
வெளியிட்டு
மகாலட்சுமி
நெகிழ்ச்சி!

ரவீந்திரன்,மகாலட்சுமி
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஐந்து மாதம் முடிவடைந்து விட்ட பின்னரும், தற்போது வரை ஹாட் டாப்பிக்காக இவர்களில் திருமணம் பற்றிய பேச்சுத்தான் சோஷியல் மீடியாவில் உள்ளது. இந்த இளம் ஜோடியும் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஜாலியாக வெளிநாட்டுக்கு ஹனிமூனுக்கு போகாமல் அனைத்து ஊடகங்களுக்கும் வளைத்து வளைத்து பேட்டி கொடுத்தனர்.

கிண்டலடித்த ரசிகர்கள்
இவர்களின் திருமணத்தால் ஷாக்கான மகாலட்சுமியின் ரசிகர்கள் பலரும் இவர்களை கிண்டலடித்தனர். இது பணத்திற்காக நடந்த திருமணம், ரவீந்தர் மகாலட்சுமியை மிரட்டி திருமணம் செய்து கொண்டார் என பல வதந்திகள் பரவின. ஆனால், இருவரும் இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்தாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

விதவிதமான போஸ்
இவர்களில் திருமணத்திற்கு பல மோசமான கமெண்டுகள், ரவீந்திரனை உருவகேலி செய்வது என பல விமர்சனங்கள் வந்த போதும், அதைப்பற்றி எந்த கவலையும் படாமல், இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். கணவரை கட்டியணைத்தபடி போஸ், கணவருக்கு முத்தம் கொடுத்து போஸ் என இருவரும் இணையமே திணறும் அளவுக்கு போஸ் கொடுத்து வருகின்றனர்.

தல பொங்கல்
இந்நிலையில், மகாலட்சுமி ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தல பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளனர். அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக நிரம்பி வழியும் பால் மற்றும் கரும்புகளின் இனிமை உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியை நிரப்பட்டும். அனைவருக்கும் இனி பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.