ட்விட்டரில் இணைந்தவுடன் விருதுகளை பட்டியலிட்ட இயக்குனர் சாந்தகுமார்!
சென்னை: ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட், அருள்தாஸ் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான படம் மகாமுனி.
இந்த படத்தை சாந்தகுமார் இயக்க, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. தமன் இசையமைத்திருந்தார்.
ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று ஹிட் அடித்தது.

எதிர்பார்ப்பு இருந்தது
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் சாந்தகுமார். முதல் படத்திலேயே கவனம் பெற்றதால் அவரின் அடுத்த படமான மகாமுனி மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

மீண்டும் இனணகின்றனர்
எதிர்பார்புகளுக்கு இடையில் வெளியான மகாமுனி பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ஆர்யா - சாந்தகுமார் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த உடன் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

வரவேற்ற பிரபலங்கள்
இந்நிலையில் இயக்குனர் சாந்தகுமார் ட்விட்டரில் இணைந்துள்ளார். ட்விட்டரில் இணைந்ததற்கு ஆர்யா மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் சாந்தகுமாரை வரவேற்றனர். தனது முதல் ட்வீட்டாக மகாமுனி திரைப்படம் வென்ற விருதுகளின் பட்டியலை பதிவிட்டுள்ளார்.

தொடரும் பாராட்டுகள்
மகாமுனி திரைப்படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது, 2 போட்டியில் இறுதிவரை சென்றுள்ளது,
1 விழாவில் சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்பட விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது, 2 முறை அதிகாரப்பூர்வமாக விருது விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எனவும் பாராட்டுகள் இன்னும் தொடர்கின்றன எனவும் ட்வீட் பதிவிட்டுள்ளார் சாந்தகுமார்.


Click it and Unblock the Notifications











