ரகுவரன் சொல்லிக் கொடுத்ததை தான் நான் இப்பொழுது செய்கிறேன் - நடிகை ரோகினி
சென்னை: சின்ன சீனாக இருந்தாலும் அதில் நாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப, வரும் வாய்ப்புகளை ஒப்புக் கொள்கிறேன் என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார். ரகுவரன் சொல்லிக் கொடுத்ததைத் தான் இப்போதும் நான் பின்பற்றி வருகிறேன் என்றும் அவரது மனைவியும் நடிகையுமான ரோகிணி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரகுவரன் பன்முகத் தன்மை கொண்ட நடிகர். தான் நடிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர். பணத்திற்காக வரும் வாய்ப்புகளை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டது கிடையாது. இதற்கு அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், அபிமன்யு, லவ் டுடே, அமர்க்களம், ஆஹா என சொல்லிக்கொண்டே போகலாம். அவர் மறைந்துவிட்டாலும் மேற்சொன்ன படங்கள் அனைத்துமே அவருடைய நடிப்பை சொல்லும் படங்களே.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு, நடிகர் ஆர்யா நடித்த மஹாமுனி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் நடிகை ரோகினியும் கலந்துகொண்டார். இவர் இப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நடிகை ரோகிணி
இது பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது, என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்திற்கு ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தினார்கள். அந்த ஃபோட்டோ ஷூட்டிற்கு இரண்டுவிதமான லுக்குகளை மேற்கொண்டார்கள். ஒரு போட்டோ ஷூட்டுக்கே இத்தனை தூரம் மெனக்கெடுகிறார்களே என்று வியந்தேன்.

ஆர்யாவின் அர்ப்பணிப்பு
நான் இந்தப் படத்தில் தான் முதல் முறையாக ஆர்யாவுடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான நடிகர். ஒரு காட்சியை நான்கு விதமான வித்தியாசமான கோணத்தில் படமாக்கினார்கள். அந்தக் காட்சிகளில் நான்கு முறையும் ஆர்யா கண்ணீர் விட்டு அழுதார். அவருடைய இந்த அர்ப்பணிப்புத் தன்மையுடைய நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

கண்ணீர் விட்ட ஆர்யா
ஓவர் தி ஷோல்டர் - ஷாட் அவருக்கு எடுக்கும் பொழுது நான் அழுதேன் - எனக்கு ஓஎஸ்எஸ் (OSS) ஷாட் எடுக்கும் பொழுது அவர் அழுதார். அவர் கையை இறுக்கமாக பற்றி கொண்டேன்.

ரகுவரன் கற்றுக்கொடுத்த பாடம்
நான் ரகுவரனிடம் அடிக்கடி கேட்பது உண்டு. எப்படி சின்ன சின்ன ரோல்ஸ் செலக்ட் செய்து நடிக்கிறீர்கள் என்று. அதற்கு அவர் சொன்னது, நான் இயக்குனர் கதை சொல்லும் பொது, எத்தனை கிளோஸ் அப் ஷாட் எனக்கு வரும், ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் (Screen presence) எவ்வளவு தெளிவு இருக்கும் என்பதை சிந்திப்பேன் அவ்வளவு தான், என்பது தான்.

சின்ன சீன் பெரிய பெயர்
அவர் சொல்லி கொடுத்ததை நானும் இப்பொழுது செய்து வருகிறேன். சின்ன சீனாக இருந்தாலும் அதில் நாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப, வரும் வாய்ப்புகளை ஒப்புக் கொள்கிறேன் என்றார்.

ரகுவரன் டிப்ஸ்
இயக்குநர் சாந்தகுமார் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே அனைத்தையும் செய்தார். இப்படிப்பட்ட ஒரு இயக்குநரைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர் கிடைத்தது, அவருக்கு பெரும் பாக்கியம்தான் என்றார் ரோகிணி. ரகுவரன் சார் டிப்ஸ் எல்லா நடிகர்களும், வளர்ந்து வரும் நடிகர்களும் மிகவும் உதவும்.


Click it and Unblock the Notifications











